Saturday, February 27, 2010

அறுசுவை.காமில் என் சமையலில் சில

http://www.arusuvai.com/tamil/node/10758 -கிரீன் சில்லி சிக்கன்
http://www.arusuvai.com/tamil/node/10918 --செட்டிநாடு பெப்பர் சிக்கன்
http://www.arusuvai.com/tamil/node/11135 - கிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ப்ரை
http://www.arusuvai.com/tamil/node/11952 - விக்கட் விங்ஸ் -பேக்ட்
http://www.arusuvai.com/tamil/node/12184 - குண்டூர் சிக்கன்
http://www.arusuvai.com/tamil/node/12292 - நெல்லை தம் பிரியாணி
http://www.arusuvai.com/tamil/node/12338 - பன்னீர் டிக்கா மசாலா
http://www.arusuvai.com/tamil/node/12552 - கிட்ஸ் ப்ரெட் கட்லெட்
http://www.arusuvai.com/tamil/node/12681 - மைக்ரோவேவ் ப்ரெட் புட்டிங்
http://www.arusuvai.com/tamil/node/13143 - ராகி புட்டு பயறு
http://www.arusuvai.com/tamil/node/13734 - பாலாடை சேர்த்து நெய் தயாரிக்கும் முறை
http://www.arusuvai.com/tamil/node/13901 - ஆட்டுக்கால் சால்னா
http://www.arusuvai.com/tamil/node/14281 - வெண்டைக்காய் பொரியல்
http://www.arusuvai.com/tamil/node/14302 - பீப் ப்ரை
http://www.arusuvai.com/tamil/node/14385 - கிரில்டு ஹமூர் பிஷ்
http://www.arusuvai.com/tamil/node/13442 - குடல் கத்திரிக்காய்
http://www.arusuvai.com/tamil/node/12085 - கீரீன் ஃபிஷ் கறி
http://www.arusuvai.com/tamil/node/13656 - ப்ளைன் கடற்பாசி
http://www.arusuvai.com/tamil/node/11460 - சேமியா மட்டன் பிரியாணி
http://www.arusuvai.com/tamil/node/12085 - கிரீன் ஃபிஷ் கறி.

Friday, February 26, 2010

கொத்துக்கறி கோஸ் / Cabbage Keema Curry














தேவையான பொருட்கள்;-
கொத்துக்கறி - கால் கிலோ
முட்டை கோஸ் – கால் கிலோ
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2
மிளகாய் -1
தயிர் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கரம்மசாலா –கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள் –அரைஸ்பூன்
குழம்புமசாலாத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு -4
மல்லி இலை- சிறிது
உப்பு – தேவைக்கு

செய்முறை:


கறியை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்.
கோஸ்,வெங்காயம்,மல்லி,தக்காளி கட் செய்து கொள்ளவும்.தேங்காய்,முந்திரி அரைத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் வீட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு,கரம்மசாலா, சேர்த்து வதக்கவும்,பின்பு தக்காளி,மல்லி,மிளகாய்,உப்பு சேர்த்து பிரட்டவும்.
கறியை சேர்க்கவும்,தயிர்,மிளகாய்த்தூள்,மசாலாத்தூள் சேர்த்து பிரட்டி குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து முட்டை கோஸ் சேர்த்து,தேங்காய் விழுது சேர்த்து உப்பு பார்த்து குக்கரை மூடி 1 விசில் வைத்து இறக்கவும்.















சுவையான கொத்துக்கறி கோஸ் கூட்டு ரெடி.
இதனை சப்பாத்தி,மற்றும் ரசம் சாதமுடன் பரிமாறலாம்.

Thursday, February 25, 2010

ஈசி வத்தக்குழம்பு















தேவையான பொருட்கள்;


சுண்ட வத்தல் – ஒரு கைபிடி
சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
இட்லி மிள்காய்ப்பொடி – 1-2 டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
கருவேப்பிலை – 2 இணுக்கு
நல்ல எண்ணெய் – 100 மில்லி
உப்பு – தேவைக்கு

செய்முறை ;
சுண்ட வத்தலை சிறிது எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.
பாதியை சாம்பார் பொடி,இட்லி மிளகாய்ப்பொடியுடன் மிக்ஸியில்
சுற்றி எடுக்கவும்.
கரைத்த புளியில் மிக்ஸியில் பொடித்ததை போட்டு கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை போட்டு வெடித்ததும்,புளிக்கரைசலை விட்டு பொரித்து எடுத்து வைத்த
சுண்ட வத்தலை போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் சிம்மில் வைக்கவும்.எண்ணெய் மேலெழும்பி வரும்.அடுப்பை அணைக்கவும்.
ஈசியான சுவையான வத்தக்குழம்பு சில நிமிடத்தில் ரெடி.சாதம்,அப்பளம்,கூட்டுடன் பரிமாறவும்.

பின் குறிப்பு :
இட்லிமிள்காய்ப்பொடியிலும்,சுண்டவத்தலிலும் உப்பு இருக்கும்,உப்பு பார்த்து போடவும்.

ஆசியா உமர்.

துபாய் நகைக்கடையை சுற்றி பாருங்க.










கண்ணை கொஞ்சம் மூடி திறங்க

பிளந்த வாயை கொஞ்சம் மூடுங்க

நகர மறுக்கிற காலகளை நகர்த்துங்க

அங்க பார்க்கிங்க்கு கார்கள் கூட்டமுங்க

நீங்க காரை எடுத்தா இடம் காலியாகுமுஙக

நல்ல யோசித்து நகை எடுத்தீங்களா?

திரும்ப வந்தா பார்க்கிங் கிடைக்காதுங்க

அப்புறம் யாரு நாயா பேயா திட்டு வாங்குவாங்க

ஒருவழியாக முடிந்துதுங்களா?

திரும்பி பார்க்காதீங்க அப்புறம் திறந்த கண்ணை மூடமாட்டிங்க

பிளந்த வாயையையும் மூடமட்டீங்க.

--ஆசியா உமர்.


குறிப்பு :

மெயிலில் வந்ததை சின்ன பாட்டெழுதி பப்ளிஸ் பண்ணியாச்சு.

Wednesday, February 24, 2010

திக் திக் ….கால்




இரண்டு நாளாய் ஒரே பட படப்பு ,
என் மொபைல் ரிங் டோனே
எனக்கு எதிரியானது.
என் எண் யாருக்கும்
தந்ததில்லை
அதனால் ஒருவருக்கும்
தெரிந்ததில்லை
ஆனால் அழைப்பு
வருவதும்
போவதும்
இதென்ன வம்பு

மறுபடியும் ரிங்டோன்
கண் மூடினேன்
விடாது அழைத்தது
பொறுக்காமல் எடுத்தேன்
மரண நிசப்தம்
சிறிது நேரம்
அடுத்து உருட்டுவது
போல் சப்தம்

உள்ளம் நடுங்கியது
உடல் வியர்த்தது
ஹலோ ஹலோ
.ஹலோ...யாரது ?
பதில் இல்லை
பரிதவிப்பு,படபடப்பு
பயம் எல்லை
கடந்தது.

தைரியமாக் மெசேஜ்
அனுப்பினேன்,
இனி அழைத்தால்
போலீஸ் வரும் என்று.
சிறிது நேரத்தில்
பயமுறுத்தும் ரிங்டோன்
தெரியும் அந்த நிசப்தம்
பற்றி,எடுக்கவில்லை

மீண்டும் மீண்டும்
கால்,வழியில்லாமல்
எடுத்தால்
பிரபல ப்ளாக்கர்
நான் தான் அக்கா
உங்கள் பெயர்
ஆ-வில் தொடங்குவதால்
அறியாமல் கை பட்டு
கால் வந்திருக்கும்.

அப்பாடா நிம்மதி
அதற்காக இப்படியா ?
அடிககடி அடித்தால்
பட படக்காதா?

இருவரும் சிரித்தோம்
அசடு வழிந்தோம்
கவனகுறைவால் கைபட்டு
மொபைல் அழைத்ததால்
பட்ட வேதனை நானறிவேன்.
அந்த திக் திக்
இன்னமும் நெஞ்சில்.

--ஆசியா உமர்.

Tuesday, February 23, 2010

முருங்கைக்கீரை சால்னா

















தேவையான பொருட்கள் :

முருங்கைகீரை – 2 கப்
வெங்காயம் -2
பூண்டு – 4 பல்
மிளகாய் வற்றல் - 2
சீரகம் – அரைஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 2  டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4
அரிசி – 1 டேபிள்ஸ்பூன் (வ்றுத்து சேர்க்க வேண்டும்)
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை:


முருங்கைகீரையை ஆய்ந்து அலசி எடுத்து கொள்ளவும்.
வெங்காயம்,பூண்டு கட் செய்து கொள்ளவும்.அரிசியை லேசாக மணம் வர வறுத்து எடுத்து அதனுடன் முந்திரி பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு,சீரகம்,உளுத்தம் பருப்பு,வற்றல்,பூண்டு ,வெங்காயம் சேர்த்து வதக்கி,கீரையை சேர்க்கவும் .
4 கப் அரிசிக்கழனி அல்லது தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு,அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் வைத்து இறக்கவும்.
சுவையான சத்தான முருங்கைக்கீரை சால்னா ரெடி.
இதனை வடகம், ப்லைன் சாதத்துடன் பரிமாறவும்.

-ஆசியா உமர்.

Monday, February 22, 2010

என் வீட்டுத்தோட்டத்தில்


என்னை துயில் எழுப்பியது யார்?
விழித்தால் விழித்திரையில் ஓடியது
என் வீடும் தோட்டமும்.




உடனே ஆட்டோவிற்கு அழைப்பு
ஏறினேன் இறங்கியது தான்
தெரியும்.

வாசற்கதவை திறந்தேன்
என்னை எதிர்கொண்டு அழைக்க
ஒருவரும் இல்லை.

சில்லென்று இருக்கும்
என் தோட்டம்
சினம் கொண்டதோ !

கண்ணடித்து சிரிக்கும்
கிறிஸ்த்மஸ் மரம்
கண்மூடிக் கிடந்தது .

லாலா பாடும் லானும்
கண்டு கொள்ளவில்லை
என்ன ஆனது?

என்றும் இளமையான
இலட்சை கொட்டை மரம்
இறுமாப்புடன் இருந்தது .

கொய்யா என்னை
கொல்லத்தான் இல்லை
குரைத்தது.

பச்சை பசேலென்று இருக்கும்
கருவேப்பிலை
கறுத்துக் கிடந்தது.

முருங்கை மரமோ
முத்திய காய்களுடன்
என்னை அடிக்க வந்தது.

தென்னை மட்டும்
என்னவாம்
தேம்பித் தேம்பி அழுதது.

ஒரு பக்கம் இப்படி
மறுபக்கம் போனால்

மனதை மயக்கும் மல்லி
மாண்டும் விடும் போல்
இருந்தது.

ராஜாவை மயக்கும் ரோஜா
ராட்சசியாய்
காட்சியளித்தது

மருதாணி மரித்தே விட்டது
மாதுளை மயங்கிக் கிடந்தது
வாழை வாடியிருந்தது
செல்லமாய் வளர்த்த குரோட்டன்ஸ்
சுருண்டுக் கிடந்தது
என்னடா செல்லம் என்றேன்

நான்கு நாட்களாய்
வாட்ச்மேன் வரலையாம்
அதனால் வாட்டமாம்

விழுந்தடித்து அவற்றின்
தாகம் தீர்க்க
தண்ணீர் தந்தேன்

நான் தவமிருந்து
வளர்த்த செல்லங்களுக்கு.

சிறிது நேரம் கழிந்தது
சீறிய தோட்டம்
சிந்து பாடியது

கிளம்பினேன்
கதவை மூடினேன்,

அம்மா என்று சத்தம் வரவே
திரும்பினால் மணிப்ளாண்ட்
மன்னித்து விடம்மா
உன்னை மறந்து விட்டேனே
எதுவும் வேண்டாமம்மா
நானும் வருவேன்
உன்னோடு என்றது.

-ஆசியா உமர்

சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு
















தேவையான பொருட்கள் ;
சுரைக்காய் – கால் கிலோ
கடலை பருப்பு – 50 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்(விரும்பினால்)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1
கருவேப்பிலை மல்லி இலை – சிறிது
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு –தேவைக்கு

செய்முறை :
சுரைக்கயை தோல் சீவி சிறியதாக கட் செய்து வைக்கவும்,பிஞ்சாக இருந்தால் விதை நீக்காமல் கட் செய்யவும்.
கடலை பருப்பை ஊற வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,மல்லி இலை கட் செய்யவும்,மிளகாயை கீறி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடித்ததும்,வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட்,சேர்த்து வதக்கி,தக்காளி,மிளகாய் சேர்த்து,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து,சுரைக்காய்,கடலை பருப்பு ,உப்பு சேர்த்து கிளரவும்.சுரைக்காயில் ஊறும் தண்ணீரே போதும். மூடி வெயிட் போடவும்.2 விசில் விடவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து தேங்காய் துருவல் சேர்த்து கிளறி மல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு ரெடி.இதனை சாதம்,சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.
-ஆசியா உமர்.

Saturday, February 20, 2010

தோசை கூட சுடத் தெரியாத நான்


இது பல வருடங்களுக்கு முன்னாடிங்க,இப்பவும் அப்படி ஒண்ணும் பாராட்டு கிடைக்கலை,அவர் சாப்பிடும்பொழுது நல்லாயிருக்கான்னு கேட்டால் ஒரே பதில் தாங்க not bad.ஆகா என்ன ருசின்னு சொல்வார்ன்னு எதிர்பார்த்து தினமும் கேட்பதுண்டு,அவரும் பதிலை மாத்துறதாக இல்லை,நானும் கேட்பதை விடப்போவதில்லை.

எங்க வீட்டில் ஒன்பதாவதுங்க (கடைக்குட்டி) நான்.ஆறு அண்ணன்,இரண்டு அக்கான்னு பெரிய குடும்பம்.அதனால எனக்கு கிச்சன் உள்ளே நுழைய இடமே எப்பவும் கிடைத்தது இல்லை.செல்லமாக வெளியூர் எல்லாம் அனுப்பி படிக்க வைச்சாங்க.நானும் சொந்த மாமா மகனுக்கே வாக்கப்பட்டு போனேன்,அங்கு என்னன்னா நான் தான் மூத்த மருமகள்,அவர்,மாமா,மாமி,ஒரே மைனி,2 கொழுந்தன்னு சந்தோஷமான குடும்பம்.மாமி உடம்புக்கு முடியாதவங்க என்பதால மைனி தான் பொறுப்பு எல்லாம்,அதனால் மருமகள் வரும் பொழுது மகளை திருமணம் செய்து அனுப்பனும் என்று இருந்தாங்க,இருவருக்கும் ஒரே நாள் திருமணம்.மைனி போனால் அப்ப நான் தானே எல்லாம் செய்யணும்.ஒரே பயம் எதற்கெடுத்தாலும் பயம்,தெனாலி கமல் அளவிற்கு இல்லைன்னாலும் எப்பவும் பயத்துடன் தான் இருப்பேன்,எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்,விவேக் காமெடி தாங்க.

இதில் எங்கிருந்து தோசை வருதுன்னு கேக்கறீங்களா ? விழுந்து விழுந்து எங்க வீட்டில மீன் ஆய்வதில் இருந்து ஆட்டுக்கால் சுத்தம் செய்யன்னு கஷ்டமான வேலை எல்லாம் சொல்லி தந்தாங்கஆனால் ,இந்த தோசையை சுட்டு பாருன்னு யாரும் சொல்லலை,நானும் சுட்டுப்பார்க்காமலே புகுந்த வீடு வந்து சேந்தாச்சு.

திருமணம் ஆன புதிதில் கூட்டமாக எல்லாரும் இருந்ததால் ஜாலியாக இருந்திச்சு.நானே சமைக்க வேண்டிய நேரம் வந்தது,மாமி இன்னைக்கு தோசை சுடுறியாமன்னு ஒரு நாள் கேட்டாங்க,தோசை தானேன்னு நானும் சரின்னு சொல்லிட்டேன்.ஓவ்வொருத்தராக சாப்பிட உட்கார்ந்தாங்க,தோசைக்கல்லை எண்ணெய் ,வெங்காயம் தேய்த்து ரெடி பண்ணீயாச்சு,ஒட்டாமல் வரணும் என்று வேண்டிகிட்டே ஊற்றினேன்,திருப்பி போட்டேன்,அழகாக வந்தது.ஆனால் சேப் தாங்க அமீபா,யுக்ளினா மாதிரி வந்திச்சு.எப்படியோ 10 தோசை சுட்டு வைத்து விட்டேன்,எல்லாரும் சாப்பிட்டு விட்டு ஒண்ணும் சொல்லலை,மாமா சாப்பிடனும்,திக் திக் னு இருந்திச்சு.அப்ப பார்த்து எங்க உறவினப்பெண் நல்ல தண்ணீர் எடுக்க எங்க வீட்டீற்கு வந்தா,என்னை விட 8 வ்யது சின்ன பொண்ணு,அவளிடம் நான் உனக்கு தோசை சுடத்தெரியுமான்னு பாவம் போல் கேட்டேன்,ம்ம் நல்ல சுடுவேனே ! அப்படின்னா, கொஞ்சம் தோசை சுடு நான் உனக்கு தண்ணீர் அடித்து தருகிறேன்னு ஒரு அக்ரிமெண்ட் போட்டுட்டு.நான் தண்ணீர் அடிக்க, அவள் தோசை சுட்டு முடிக்க மாமா வரவும் சரியாக இருந்தது. பயம் இல்லாமல் சூப்பர் தோசையை மாமாவிற்கு பரிமாறினேன்.இப்படி கொஞ்ச நாள் ஓட்டி எப்படியோ எல்லாம் செய்ய கற்றுக்கொண்டாச்சு.

இப்ப என்னன்னா என் மகள் இப்பவே நான் சமைப்பேன் என்று களத்தில் இறங்கி அட்டகாசம்,நானும் சரின்னு முடிந்ததை செய்யுன்னு விட்டுட்டேன்,என் மகன் நானும்னு,அவனும் சமைப்பான்,அவன் நூடுல்ஸ்,சாண்ட்விச் ஸ்பெஷலிஸ்ட்ங்க.அவருக்கு நல்ல டீ,காபி போடத்தெரியும்.மற்றவங்களுக்கு டீ தைரியமாக போட்டுவிடுவேன்,அவருக்குன்னா இன்னமும் பயம்.
மாமா வீட்டிலே யாரும் சமைத்ததை குறை சொல்லாததால் தட்டித்தடுமாறி இப்ப not bad –ன்னு சொல்ற அளவுக்கு சமைக்க கற்றுக்கொண்டேன்.அப்ப்டி இப்படின்னு கற்றுக்கொண்டதை தாங்க இங்க போட்டு அசத்தப்போறேன் .

ஆசியா உமர்.

சிறு கிழங்கு பொரியல்











தேவையான பொருட்கள் ;
சிறு கிழங்கு - அரை கிலோ
வெங்காயம் - 2 பெரியது
பூண்டு - 2 பல் 
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை :
சிறு கிழங்கை மண் ,அழுக்கு போக கழுவி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு தோல் நீக்கி பொடியாக கட் செய்து ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரிலேயே போடவும்.வெங்காயம் கட் செய்து கொள்ளவும்.

அதனுடன் உப்பு சேர்த்து வேகவைக்கவும்,பக்குவமாக வெந்தவுடன் தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
சீரகம்,மிளகாய்,பூண்டை மிக்ஸியில் சுற்றி,தேங்காய் துருவலாக இருந்தால் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் 2 பல்ஸ் செய்தால் போதும்,பூந்துருவலாக வந்துவிடும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை போட்டு வெடித்தவுடன் வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும்,ரெடி செய்த தேங்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அதனுடன் வேகவைத்த சிறு கிழங்கை சேர்க்கவும்.சிறிது அடுப்பை சிம்மில் வைத்தால் பொரியல் ஆகிவிடும்.

உதிரி உதிரியாக பார்க்க அழகாக இருக்கும்.மல்லி இலை விரும்பினால் கட் செய்து தூவி இறக்கவும்.

ருசியான சிறு கிழங்கு பொரியல் ரெடி.


டிப்ஸ் ;அசைவப்பிரியர்கள் இந்த சிறுகிழங்கை,கொத்துக்கறியுடனும், மீனுடனும் சேர்த்து சமைத்தால் அசத்தலாக இருக்கும்.
நாங்க எங்க வீட்டில் அயிரை மீனை சிறு கிழங்கு சேர்த்து கூட்டு செய்வோம்.சூப்பராக இருக்கும்.

-ஆசியா உமர்.

Thursday, February 18, 2010

கிட்ஸ் கிரிஸ்பி பொட்டடோ ஃப்ரை













தே.பொ:-
உருளைகிழங்கு - கால் கிலோ
எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பெருங்காயம் பெரிய பின்ச்.
உப்பு - தேவைக்கு

2 நபர்களுக்கு.
செய்முறை:-
முதலில் கிழங்கை தோல் நீக்கி,பொடியாக கட் செய்து பாத்திரத்தில் தண்ணீரில் போடவும்.
அதனை 5 நிமிடம் கொதிக்க விடவும்,தண்ணீரை வடிகட்டவும்.
ஒரு நான்ஸ்டிக் ஃப்ரை பேனில் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை தாளித்து,பெருங்காயம் சேர்த்து கட் செய்த உருளைக்கிழங்கை வதக்கவும்.
சிறிது பொரிந்தவுடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்புத்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கினால் முடிந்தது.
டேஸ்டி,கிரிஸ்பி பொட்டடோ ஃப்ரை ரெடி.சூப்பராக இருக்கும்.

Tuesday, February 16, 2010

அபி இப்ப ஆசியா அப்ப

இந்த காய்ச்சல் வந்தாலும் வந்தது ,எல்லாம் தலை கீழாகிவீட்டது..ஏதோ சமைத்தோம் முடிந்த போது படம் பிடித்தோம்,இணையதளத்திற்கு அனுப்பினோம்னு இருந்த என்னை மர்மகாய்ச்சல் ஒரு வழியாக்கி விட்டது.
இப்ப தூங்குவது,நடமாடுவது,சாப்பிடுவது இது தாங்க நடக்குது.கொஞ்சம் சுகமானமாதிரி இருந்தது,சும்மா இருந்திருக்கலாம்,சமைத்து அசத்தலாம் என்று ஒரு ப்ளாக்கை ஆரம்பித்த் வேலை சுத்தமாக சமைக்க முடியாமல் போய்விட்டது.சரி ஏதாவது எழுதலாம்னு நினைத்த போது அபி வந்து முன்னே நிற்கிறான்,அபியை பற்றியே சொல்றேனே !

அபி எங்க வீட்டிற்கு ஏழு வருடமாக பழக்கம். வீட்டில் சமைத்து,ஏவின எல்லா வேலைகளையும் சூப்பர் வேகத்தில் செய்வதில் அவனுக்கு நிகர் அவனே.காலையில் 6.15 மணிக்கு ஆஜர் ,டீ போட்டு எல்லாருக்கும் தந்துவிட்டு வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து ,நல்ல தண்ணீர்,உப்பு தண்ணீர் மோட்டர் போட்டு,பிள்ளைகள் ஸ்கூலிற்கு அனுப்ப வாட்டர் பாட்டில் நிரப்பி,கூட மாட ஒத்தாசை செய்து ஸ்கூல் வேனில் பையையும் பிள்ளைகளையும் ஏற்றிவிட்டு வந்து,மாமாவிற்கு வெண்ணீர் வைத்து திரும்ப அனைவருக்கும் இரண்டாவது டீ தந்து,டிபன் செய்ய் ஆரம்பித்து விடுவான்,கொஞ்சம் முச்சு விட்டுக்கறேன்,எஸ்.பி.பி மாதிரி மூச்சு விடாமல் பாடலாம்னால் முடியலைப்பா.

அப்புறம் ஆசிக்கு என்ன வேலை, நெட்டில் அரைமணி நேர உலா.அதற்குள் மாமா குளித்து வந்துவிட அபி சமைத்ததை அழகாக நாம சமைத்த மாதிரி பரிமாறிவிட்டு அடுத்து நம்ம டிபன் ,குளியல்,அதற்குள் மார்க்கட் வந்துவிட திரும்ப அபியுடன் சேர்ந்து கொஞ்சம் சமையல்,அபி தான் இருக்கானே.,எனக்கு தான் வலிக்காத இடத்தை யோசித்தால் கூட சொல்ல தெரியலை,ஒரு டம்ளர் தண்ணியை கூட கையால் தூக்க முடியலை,மணிக்கட்டு வலிக்கும்,வாய் கொப்பளித்தால் கை முழுவதும் வலிக்கும் இதை சொல்லனும்னா ஒரு இடுகை பத்தாது. இதயமாவது சும்மா இருக்கா?அவர் அங்கு இருப்பதால் எந்நேரமும் வலி.இதற்கிடையில் மாமியை கவனிக்கிறது,அதுவும் அபி தான்,வெண்ணி தண்ணி கொடுப்பதோடு சரி என் வேலை.அவர்கள் டிபன் முடியும் வேலை எங்கள் மதிய சாப்பாடு அதுவும் அபி பரிமாற சாப்பிட்டு விட்டு ,நெட் ஒரு மணி நேரம்,அபியும் வேலையை முடித்து மதியம் ரெஸ்ட் எடுக்க கிளம்பினால் வீடே அமைதியாகி ஒரு தூக்கம். நீ என்ன தான் செய்து கிழிச்சேன்னு மனதில் நினைப்பது தெரியுதுபா,வெயிட்,மூச்சு விட்டுக்கறேன்.

ஒரு ப்ளாஸ்க் நிறைய டீ போடுறது தாங்க என் வேலை.மாமாவை பார்க்க வருகிறவர்களுக்கு டீ பரிமாற்றம்,அதற்குள் பிள்ளைகள் பள்ளியில்ருந்து வர ஒரு அரைமணி நேரம் கூச்சல் தான்,ஓயும் நேரம் அபி வந்து பிள்ளைகள் சாப்பாட்டு கூடையை சரி செய்து விட்டு இரவு சப்பாத்தி போட ஏற்பாடாகிவிடும்.இதை எல்லாம் சில சமயம் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடந்து சரி பார்ப்பேன்,என்னம்மா கண்ணு ரஜினி, சத்யராஜ் கற்பனையில் ஓடினால் நான் பொறுப்பு இல்லை, சிக்கன் குனியாவினால் எனக்கு இடது கால் தான் ஊன்றமுடியாது, இடது காலை எடுத்து வைக்கும் பொழுது வலது கையில் உள்ள ஸ்டிக்கை ஊன்றி,ஊன்றி நடக்கவேண்டும்,இப்படி தாங்க என் வீடூ உழா.மூச்சை விட்டுகறேன்......

இரவு அபி சமைத்ததை நான் சமைத்ததாக நினைத்து மாமா,மாமிக்கு பரிமாறிவிட்டு,பிள்ளைகளை  சாப்பிட வைத்து பால் கரைத்து கொடுத்து வேலை முடிந்து அக்கடான்னு உட்கார்ந்தால் அக்கா நான் வரட்டா? அபி கேட்கும் பொழுது தான் தூங்கும் வேளை வந்து விட்டதேன்னு கவலை,வலியில் தூக்கம் வரனுமே,அதை மறக்க திரும்ப நெட் தான்....

அபியை பற்றி சொல்லனும்,அபி என்கிற ஜாகிர் ஹுசைன் ,எனக்கு தம்பி மாதிரி,ஏன்னு அவனுக்கு அபின்னு பேருன்னா அவன் எல்லோரையுமே அபின்னு தான் கூப்பிடுவான், சோ நான் அவனை அபின்னு கூப்பிடுவேன்,பொம்பளைன்னு சொல்ல முடியாது ஆனால் சுத்தமான ஆம்பிளை தாங்க எங்க அபி, அவன் சமையல் மட்டும் செய்ய மாட்டான்,இடையில் பாட்டு டான்ஸ் எல்லாம் உண்டு ,கடைசியாக அபி சொன்னது என்ன தெரியுமா?உங்க வீட்டிலே வாக்கப்பட்டாச்சு, வாழ்நாள் முழுவதும் இங்கே தான்.ஆனால் கோவில் திருவிழா,அரசியல் கூட்டம் , புதுப்பட ரிலீஸ் என்றால் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவான்,அப்ப நிஜமாகவே முச்சு விட முடியாமல் வேலை இருக்கும்.அப்பாடா மூச்சு விட்டுக்கறேன். காய்ச்சல் வந்தவங்களில் சில பேர் தவழ்றாங்களாம், நானாவது தத்தி தத்தி நடக்கிறேனே! காம்ப்ளான் பாய் சொன்ன மாதிரி நான் இப்ப நடக்கிறேனே அம்மா !காய்ச்சல வரும் போகும்,இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா !
இப்ப புரியுதா அப்ப ஆசியாஸ் கிச்சன், இப்ப அபிஸ் கிச்சன்.

--ஆசியா உமர்.

Monday, February 15, 2010

எங்க ஊர் (வீட்டு) அடிப்படை மசாலா

இந்த மசாலா இல்லாத இஸ்லாமிய வீட்டை எங்கள் ஊரில் பார்ப்பது அரிது .மசாலாத்தூள் ஊர்க்கடைகளிலும் திரித்து ரெடிமேடாக கிடைக்கிறது மசாலாப்பொருட்களை காயவைத்து சுத்தம் செய்து திரித்து வைத்துக்கொண்டால் ஆறு மாதம் வரை அதே மணத்துடன் கெடாமல் இருக்கும்.கைபடாமல் பழகினால் ஒரு வருடம் வரை கூட அப்படியே இருக்கும்.

தேவையான பொருட்கள் ;

முழுமல்லி – 1 கிலோ
மிளகாய் வற்றல் – 200 கிராம் (காரம் அதிகம் வேண்டுவோர் 50 கிராம் அதிகம் சேர்க்கவும்.)
மஞ்சள் – 200 கிராம்
சீரகம் – கால் கிலோ
பெருஞ்சீரகம் – 50 கிராம்

இவற்றை மிஷினில் கொடுத்து திரித்து வைத்துக்கொண்டால் சமையல் அனைத்தும் அசத்தலாக இருக்கும்.எங்கள் ஊரில் இதனை டால்கம் பவுடர் மாதிரி நைஸாக திரித்து தருவார்கள்.எல்லாவகை குழம்பிற்கும்,குருமாவிற்கும் இது தான் அடிப்படை,மீன் சமைக்கும் பொழுது இந்த மசாலாவுடன் மிளகாய்த்தூள்,பூண்டு மட்டும். கறி சமைக்கும் பொழுது இஞ்சி பூண்டு,கரம் மசாலா என்று சேர்த்து சமைக்கலாம் அல்லது பாதி மசாலாத்தூள் மீதி மிளகாய்த்தூள் என்றும் சேர்க்கலாம். இந்த மசாலாவை சமையலில் எத்ற்கெல்லாம் சேர்த்தால் ருசி தருமோ அவை எல்லாவற்றிலும் சேர்த்து அசத்தலாம்.

-ஆசியா உமர்.