Monday, May 24, 2010

தட்டைபயறு கத்திரிக்காய்

தேவையான பொருட்கள் ;

தட்டைபயறு - 100 கிராம்

கத்திரிக்காய் - 200 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி -2

பச்சை மிள்காய் - 2

பூண்டு - 4 பல்

மிள்காய்த்தூள் - அரைஸ்பூன்

சீரகத்தூள் - அரைஸ்பூன்

மஞ்சள்தூள் - அரைஸ்பூன்

மல்லித்தூள்- ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

கடுகு,உ.பருப்பு - தலா அரைஸ்பூன்

மல்லி,கருவேப்பிலை -சிறிது

தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

முந்திரி பருப்பு -2.

உப்பு - தேவைக்கு


முதலில் கத்திரிக்காய்,வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்,பூண்டை தட்டி வைக்கவும்,மிளகாய் கீறிக்கொள்ளவும்.தேங்காய் முந்திரி அரைத்து வைக்கவும்.

தட்டைபயறை லேசாக வறுத்து ஊற வைத்து குக்கரில் மூழ்கும் அளவு தண்ணீர் ,தேவைக்கு உப்பு சேர்த்து 2 விசில் வைத்து இறக்கவும்.வெந்து விடும்.




வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உளுத்தம்பருப்பு சேர்த்து வெடித்ததும்,கருவேப்பிலை,வெங்காயம்,பூண்டு,தக்காளி, ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,கத்திரிக்காய் சேர்ர்த்து வதக்கி சிறிது உப்பு போட்டு மூடி நன்கு வேக விடவும்.



கத்திரிக்காய் வெந்த பின்பு,மசாலா வகைகளை சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் தெளிக்கவும்.


பின்பு வேகவைத்த தட்டைபயறை வெந்த தண்ணீருடன் சேர்க்கவும்.கொதி வரவும் தீயை குறைத்து சிறிது நேரம் வைக்கவும்.

அத்துடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.தேவைப்பட்டால் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.

தட்டைபயறு,கத்திரிக்காய்,தேங்காய்,மசாலா சேர்ந்து கொதித்து நல்ல குழம்பு மணம் கமகமக்கும்.

சுவையான தட்டைபயறு கத்திரிக்காய் ரெடி.இதனை சாதம்,சப்பாத்தி,அரிசி மாவு ரொட்டியுடன் பரிமாறலாம்.


-ஆசியா உமர்.

31 comments:

LK said...

இப்படி செஞ்சது இல்ல.

Chitra said...

கத்திரிக்காய் சேர்க்காமல் செய்து இருக்கிறேன். அடுத்த முறை, அதையும் சேர்த்து செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

ஜெய்லானி said...

:-))))

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்க்கா..எனக்கு கடைசல் வகைகள் ரொம்ப பிடிக்கும்...

இளம் தூயவன் said...

இது புதிய வரவு தான் , வீட்டில் செய்ய சொல்லிட்டேன்.

எம் அப்துல் காதர் said...

தட்டை பயறு என்றால் காராமணி பயரா மேடம்? செய்து பார்க்க சொல்லணும்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல குழம்பு எங்கவீட்டுல எங்கம்மா நல்லா செய்வாங்க.. இப்போ என் மனைவியும் நல்லா செய்வாங்க.. நான் விரும்பி சாப்பிடும் குழம்பு.

மின்மினி said...

நல்ல குழம்பு. செய்து பாத்திட‌வேண்டியதுதான்.

Geetha Achal said...

சூப்பர்ப் குழம்பு...நானும் கத்திரிக்காய் சேர்த்து செய்ததில்லை...தனியாக செய்து இருக்கின்றேன்...பார்க்கவே சூப்பராக இருக்கின்றது...அருமையான சத்தான குறிப்பு...

asiya omar said...

எல்.கே ,ஜெய்லானி வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

சித்ரா கத்திரிக்காய் அதோடு சில சமயம் கருவாடும் சேர்த்து செய்வதும் வழக்கம்.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மேனகா இது கடைசல் வகையா? தெரியலை.கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

அப்துல் காதர் காராமணி வெள்ளையாக கருப்பு கண்ணோடு இருக்கும்,இந்த பயறு சாக்லேட் கலரில் இருக்கும்,நெல்லையில் இந்த குழம்பு பிரசித்தம்.

asiya omar said...

இளம் தூயவன் வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மின்மினி ரொம்ப நாளாய் உங்களை காணோமேன்னு பார்த்தேன்,வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

ஸ்டார்ஜன் அம்மா கைமணம் தனிதான்,என் மகன் கூட எங்கேயாவது சாப்பிட்டால் எங்கிட்ட உம்மா நீங்க செய்த மாதிரி இல்லைன்னு சொல்வான்.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

கீதா ஆச்சல் கத்திரிக்காய் சேர்த்து செய்து பாருங்க,உங்களுக்கு பிடிக்கும்.

athira said...

ஆசியா, சைவக்குறிப்பைப் பார்த்ததும் செய்யவேணும் போலுள்ளது. தட்டைப்பயறு என்றால் பச்சையாக இருக்குமே அது இல்லையோ? இது வேறு நிறமாக இருக்கே.

அநன்யா மஹாதேவன் said...

வெங்காயம் போட்டு தேங்காய் அரைச்சு விடுற முறை ரொம்ப புதுசா இருக்கு. கட்டாயம் பண்ணி பார்த்துட வேண்டியது தான். டாங்கீஸ் ஆசியா அக்கா.

vanathy said...

ஆசியா அக்கா, அருமையா இருக்கு.

மங்குனி அமைச்சர் said...

//Chitra said...

கத்திரிக்காய் சேர்க்காமல் செய்து இருக்கிறேன். அடுத்த முறை, அதையும் சேர்த்து செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.///


சும்மா பொய் சொல்லாதிக மேடம் , வீட்டுகார்ட சொல்லி செய்ய சொல்றேன்னு சொல்லுங்க

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

:-))))///


ஏன்னா ஜெய்லானி வாயடைச்சு போயிட்டியா ?

asiya omar said...

அநன்யா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

அமைச்சர் வருகைக்கு நன்றி.

asiya omar said...

வானதி மிக்க நன்றி.

Jaleela said...

தட்டை பயறு கத்திரிக்காய் சூப்பரா இருக்கு.

மகி said...

சூப்பர் குழம்பு ஆசியாக்கா! அம்மா அடிக்கடி செய்வாங்க. நாங்க புளிக்கரைசல் சேர்ப்போம்..இந்த வர்ஷனும் நல்லா இருக்கு!

asiya omar said...

அதிரா பச்சையாக இருப்பது பச்சைப்ப்யறு (green gram)இது வேறு cow beans ஆங்கிலத்தில் சொல்லுவாங்க.கிடைத்தால் செய்து பாருங்க.

asiya omar said...

ஜலீலா, மகி கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

தட்டைப்பயிறில் குழம்பு.செய்து பார்த்துடுவோம்.

asiya omar said...

ஸாதிகா நிச்சயம் செய்து பாருங்க,என் மெனுவில் மாதம் ஒரு முறை இது உண்டு.