Wednesday, April 6, 2011

பகுதி -2, அல்-ஐன் பாரடைஸ் கின்னஸ் உலக சாதனை / Al-Ain Paradise - Guinness World Records

பகுதி - 2
அல்- ஐன் அமீரக பாலவனச் சோலைகளில் மிக நளினமானதும் சுற்றுலா தளங்களும் நிறைந்தது. நாங்களும் அடிக்கடி இந்த பூங்கா வழியாகத் தான் போய் வந்து கொண்டிருந்தோம், ஆனால் இதுவரை அல்- ஐனில் உள்ள மற்ற பூங்காக்கள் போலத்தான் இதுவும் என்று உள்ளே நுழையவில்லை.ஏகப்பட்ட பூந்தொட்டிகள் இருக்கே, ஒரு நாள் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். தீடீரென்று கல்ஃப் நியுஸில் அல்-ஐன் பேரடைஸ், பூந்தொட்டிகளால் நிறைந்த அந்த பூங்கா கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளதாக செய்தி பார்த்தோம்.இதுவரை காத்திருப்பில் இருந்த அந்த பூங்காவை நாங்களும் சென்று ஒரு வழியாக பார்த்து விட்டு வந்து விட்டோம். யு.ஏ.இ. வாசிகள் நேரில் போய் பாருங்க, சின்ன பூங்கா தான் ஆனால் எங்கும் எதிலும் மலர் தொட்டிகளோ தொட்டி. மற்றவர்கள் படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்க.

இது தான் கின்னஸ் சான்றிதழ், பூங்காவின் வாயிலில் புல்லினால் ஃப்ரேம் செய்து வச்சிருந்தாங்க. இந்த பூங்காவை Akar Landscape நிறுவனம் தான் பராமரிச்சிட்டு வராங்க,கிட்டதட்ட 300நபர்கள் பணியில் ஈடுபட்டிருக்காங்க.
உள்ளே நுழைந்தவுடன் ஈஃபிள் டவரின் மாதிரி வடிவம், அழகோ அழகு.

அப்படியே திரும்பி பார்த்தால் தொங்கும் பூந்தொட்டிகளின் அணிவகுப்பு.இந்த மஞ்சள் மலரை பார்த்தவுடன் அதன் மகிமையே தனி தான் என்று நினைக்க வைத்தது.இந்த நீலநிற தொட்டியும் என்னைக் கவர்ந்த ஒன்று.கிட்டதட்ட 2965தொங்கும் பூந்தொட்டிகளைக் கொண்டுள்ளது. இது உலகில் இரண்டாவது முறையாக இந்த சாதனையை தக்க வைத்துள்ளது. இருபத்தோராயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.யு.ஏ.இ -யில் மிகப் பெரிய பூங்காக்கள் எல்லாம் இருந்தாலும் இதில் இருக்கக்கூடிய மலர்கள் தான் இதன் தனித்துவம்.

அமெரிக்கா,ஐரோப்பா,ஜப்பான்,ஜெர்மனி,இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து மலர்ச்செடிகள் கொண்டு வரப்பட்டு அவை பாதுகாக்கப்பட்டு வளர்த்து தொட்டிகளில் அமைத்து அழகு படுத்தியிருந்ததை பாராட்டாமல் இருக்க முடியலை.

மூன்று இதயங்கள் போல் சிவப்பு,வெள்ளை,ரோஜா நிற மலர்களைக் கொண்டு அமைத்திருந்தது மிக அழகு.

மலர்களால் ஆன இந்த பிரமிட் அனைவரையும் கவந்தது.1500மலர் தொட்டிகள் கொண்டு இந்த பிரமிட் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

மலர்களை பார்த்து ரசித்து கொண்டு நடந்ததால் நேரம் போனதே தெரியலை.இருட்ட ஆரம்பித்து விளக்குகளுடன் தோட்டம் ஜொலித்தது.திரும்பி வரும் பொழுது எடுத்த விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஈஃபில் டவர் மாதிரி அசத்தலாக இருந்தது.

இது போல அழகழகான மலர்த்தொட்டிகள் எண்ணிலடங்கா. யாரைப்பார்த்தாலும் கேமராவும் கையுமாக அலைந்தார்கள்.

ஸ்ஸ்ஸ்சப்பா இன்னும் படங்கள் இருந்தாலும் இணைக்க பொறுமையில்லை.


பார்த்து ரசித்திருப்பீர்கள், அப்படியே படம் நல்லாவேயில்லைன்னு கருத்து சொல்லிடுங்க,அப்ப தான் எனக்கு புது கேமரா கிடைக்கும், மொபைல் வேறு மசாலா வாடை தாங்க முடியலை, அதன் இருப்பிடமே கிச்சன் தான்.


ஏனெனில் அது தானே என் கேமரா. மொபைலில் போட்டோக்களை எங்கேயும் இலகுவாய் எடுக்க வசதியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.
--ஆசியா உமர்.


36 comments:

GEETHA ACHAL said...

ஆஹா...ரொமப் சூப்பராக அழகான இடம் அக்கா...

பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது...இன்னும் படங்கள் முடிந்தால் அடுத்த பதிவாக போடுங்க...

AMMU MOHAN said...

all looks ver wonderful......but arabu eluthudhan puriyala enakku..heee heeeee...

vanathy said...

இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது??? இவ்வளவு மலர்கள், கொள்ளை அழகு. அழகான பதிவு.

Chitra said...

Colorful and Beautiful. Awesome photos. Thank you for sharing.

asiya omar said...

கீதா ஆச்சல் வருகைக்கு மகிழ்ச்சி,நிச்சயம் மீண்டும் படங்கள் போடலாம்.

asiya omar said...

அம்மு மோகன் வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,அரபு எழுத்து?ஓ நீங்க ஷேக் பெயர்களை சொல்றீங்களா?

S.Menaga said...

Awesome photos...looks Beautiful...

asiya omar said...

வானதி இதனை நிர்வகிப்பது Akar Landscape என்ற நிறுவனம்,கிட்ட தட்ட 300 நபர்கள் பராமரிப்பில் ஈடுபட்டிருக்காங்க.கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

எல் கே said...

அஹா ரொம்ப அருமையா இருக்கு. படங்கள் அத்தனையும் அட்டகாசம். பளிச் பளிச் என்று வந்திருக்கு


(அப்பாடா புது கேமெரா கிடைக்காது )

Nandini said...

Nice post! Beautiful pictures.....Thanks for sharing

FOOD said...

//கல்ஃப் நியுஸில் அல்-ஐன் பேரடைஸ், பூந்தொட்டிகளால் நிறைந்த அந்த பூங்கா கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளதாக செய்தி பார்த்தோம். //
அருமை அருமை சகோ. படங்கள் அத்தனையும் அருமை. தகவல்கள் அதனினும் அருமை.

kavisiva said...

வாவ் ரொம்ப அழகா இருக்கு! நன்றி ஆசியா எங்களோடு பகிர்ந்துகிட்டதுக்கு :). இப்பவே வந்து பார்க்கணும் போல இருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

பகிர்ந்த அனைத்து புகைப்படங்களும் அருமை! மொத்த படத்தினையும் பிகாசில் போட்டு இணைப்பு கொடுங்களேன், எல்லோரும் ரசிக்க ஏதுவாய் இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

ஹைய்யோ.. ரொம்ப அழகா இருக்குப்பா..

mahavijay said...

ரொம்ப அழகா இருக்கு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

மகி said...

ஆசியாக்கா,சூப்பர்,சூப்பர்,சூப்பரா இருக்கு பூக்களெல்லாம்.எல்லாமே பூந்தொட்டிகளா? அவற்றை வைத்தே விதவிதமா பல்வேறு வடிவங்கள் செய்திருப்பது ரொம்ப அழகா இருக்கிறது.

பாலைவனச்சோலையில் இத்தனை அழகுப்பூக்களை பராமரிக்கிறாங்களே,they deserve more than Guinness Award!

மகி said...

/இந்த மஞ்சள் மலரை பார்த்தவுடன் அதன் மகிமையே தனி தான் என்று நினைக்க வைத்தது./ :)))))))))))

ஹேமா said...

வாவ்...இவ்ளோ அழகா பூக்களை வச்சே ஒரு உலகம் படைச்சிருக்காங்க.ஆனா உங்க கமெராதான் சரில்ல.இன்னும் அழகா இருந்திக்கும் புது கமெரால எடுத்திருந்தீங்கன்னா !

savitha ramesh said...

Sorggam appaa,ippave kanna suthudhe.romba arumaya irukku.

Kalpana Sareesh said...

Superb place...how do they manage such a wonderful place..

முஹம்மத் ஆஷிக் said...

ஸலாம் உண்டாவதாக சகோ.ஆசியா உமர்.

பாலைவனத்தில் பூங்காவனம்..!
மாஷாஅல்லாஹ்..!
அபாரமாக வளர்த்திருக்கிறார்கள்..!
அரிய படங்களுடன் அறிய பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

//இந்த பூங்காவை Akar Landscape நிறுவனம் தான் பராமரிச்சிட்டு வராங்க,கிட்டதட்ட 300நபர்கள் பணியில் ஈடுபட்டிருக்காங்க.//
---இந்த வரிக்கு பின்னே பல பதிவுகள் எழுதும் அளவுக்கு அவர்களின் மிகவும் அயராத கடின உழைப்பு நிச்சயமாக உள்ளது.

அவர்கள் 52'C (126F) அளவுக்கு கொளுத்தும் அமீரக கோடை வெயிலில்... இந்த பூக்களை வாடாமல்-பூங்காகாவனம் உருக்குலையாமல்-அப்படியே பராமரிக்க என்ன திட்டம் கையாளுகிறார்கள் என்பதை அறிய எனக்கு ஆவல்..!

சாருஸ்ரீராஜ் said...

கொள்ளை அழகு அக்கா.

அன்னு said...

U.A.Eyaannu sathegapada vechiduchu intha photos ellaam... antha maathiri man irukkara oorlaye ivlo azagaa paraamarikkiraanga, namma naattula paraamarippu irunthaa pothum, uram kooda vendam...ieunthaalum eduthu gavanikka all illai...hmm..

அன்னு said...

ithaya vadiva designum kadaisi photovum romba azagu :)

FOOD said...

இன்று முதல் ஒரு வாரம் லீவு. தேர்தல் பணி. முடிந்ததும் சந்திப்போம்.

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் அழகான புகைப்படங்கள் ஆசியா! அல் ஐன் வரும்போது அவசியம் பார்க்க வேண்டும். பார்க்கின் முகவரி, அது அமைந்திருக்கும் சாலை போன்ற விஷயங்களை எழுதுங்கள் ஆசியா!

asiya omar said...

எல்.கே.

நந்தினி

ஃபுட்

கவிசிவா

வெங்கட் நாகராஜ்

அமைதிச்சாரல்

மஹாவிஜய்

மகி

ஹேமா

சவிதா

கல்பனா

முஹம்மது ஆஷிக்

சாரூஸ்ரீ

அன்னு

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.

asiya omar said...

மனோ அக்கா,கிரீன் முபஸ்ஸரா போகிற வழியில் தான் சாக்கர் ஏரியாவில் இருக்கு.இப்ப தான் அபுதாபி தோழி ஒருவருக்கு கூகிள் மேப்பில் வழி அனுப்பி வைத்தேன்,உங்களுக்கும் துபாயில் இருந்து வருவதற்கு கூகிள் மேப் மெயில் செய்கிறேன்.

கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி அக்கா.

நாடோடி said...

படங்கள் அனைத்தும் அருமையா இருக்கு சகோ...

நேரில் பார்த்த உணர்வு...

கோவை2தில்லி said...

படங்கள் ரொம்ப அழகா இருக்குங்க. பகிர்வுக்கு நன்றி.

அந்நியன் 2 said...

அருமையாக இருந்தது எல்லாமே.

பகிர்வுக்கு நன்றி சகோ.

மாதேவி said...

மிக மிக அழகு.
பூக்கள்தான் கமெரா அல்ல :))

எம் அப்துல் காதர் said...

புது கேமராவெல்லாம் வேணாம் இதுவே சூப்பர்..ஆ இருக்கு..அவ்வ்வ்வ்...!!!

++++++++++++++++++++++++++++
பார்க்க பார்க்க ரொம்ப நேர்த்தியான பார்த்துக் கிட்டே இருக்கணும் போன்ற அழகா இருக்கு!!

எம் அப்துல் காதர் said...

அப்புறம் இந்த உங்களின் இந்த பதிவை இங்கேயும் எடுத்துப் போட்டிருக்காங்க!!

http://kadayanallur.org/2011/04/அல்-ஐன்-பாரடைஸ்-கின்னஸ்-உ/

SUMAZLA/சுமஜ்லா said...

Thanks for sharing this in Describia. Very beautiful flowers....