Friday, March 22, 2013

சிக்கன் & மஷ்ரூம் இன் கேஷுனட் கிரேவி / Chicken & Mushroom in Cashew Nut Gravy


தேவையான பொருட்கள்;
போன்லெஸ் சிக்கன் - 300 கிராம்
பட்டன் மஷ்ரூம் - 100 கிராம்
உலர் திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளலாம்.

அரைத்துக் கொள்ள :
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
டொமட்டோ ப்யூரி - 2 டேபிள்ஸ்பூன்
(ஒரு மீடியம் சைஸ் தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் நீக்கி சதைப் பகுதியை  நன்றாக கரைத்துக் கொள்ளவும்)
ஊறிய முந்திரி பருப்பு - 25 கிராம்
கரம் மசாலா,இஞ்சி பூண்டு விழுது,சில்லி பவுடர் - தலா ஒரு டீஸ்பூன்
ஃப்ரெஷ் கெட்டி தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

மேற்கூறியவற்றை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.


செய்முறை:
சிக்கனை நன்றாக அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
அடிகனமான வாணலியில் எண்ணெய் விடவும். சூடாகவும் அரைத்த விழுதைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.


நன்கு வதங்கிய பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய மல்லி இலை, உலர் திராட்சை சேர்க்கவும்.
சிக்கனும் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

 ஒரிரு நிமிடம் கழித்து காளான் சேர்க்கவும்.
பிரட்டி விடவும், ஒரு கப் தண்ணீர் சேர்த்து,தேவைக்கு உப்பு சேர்த்து பிரட்டி விட்டு மூடி போட்டு குறைந்தது பத்து நிமிடமாவது வேக விடவும்.பாத்திரத்தின் அடியில் கிரேவி படியும். இடை இடையே பிரட்டி விட வேண்டும்.

சிக்கன் வெந்த பின்பு திறந்து சூடாகப் பரிமாறலாம்.
சுவையான சிக்கன் & மஷ்ரூம் இன் கேசுனட் கிரேவி ரெடி.
மீதியுள்ள நறுக்கிய மல்லி இலையை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

நாண்,சப்பாதி,பரோட்டா,கீ ரைஸ் உடன் பரிமாறலாம்.விஷேச நாட்களில் வித்தியாசமாக செய்து அசத்தலாம்.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கிரேவி சூப்பர்...

நன்றி சகோதரி...

Meena Selvakumaran said...

superb clicks.so tempting.rich and spicy gravy....

Sangeetha Nambi said...

Super delicious....
http://recipe-excavator.blogspot.com

அமைதிச்சாரல் said...

அட.. இது நல்லாருக்கும் போலிருக்கே.

ஸாதிகா said...

வாவ் அருமையாக சமைத்து அசத்தீங்க தோழி.படத்தில் பார்க்கும் பொழுதே சாப்பிடத்தூண்டுகிறது.

Vimitha Anand said...

Gravy semaya irukku.. super
Win flipkart vouchers from 27coupons.com. Enter now
Come participate and win healthy Hudson canola oil hampers

Priya Suresh said...

Parotta kuda intha gravy attagasama irrukume..

VijiParthiban said...

மிக அருமையாக இருக்கிறது அக்கா . சூப்பர்.... நான் நலம் அக்கா. ஆமாம் நான்கு மாதங்களாக நான் தமிழ்நாட்டில் எனது கிராமத்துக்கு சென்றிருந்தேன் அக்கா ... ம்ம்ம்ம்ம் இனி தொடரும் என்னுடைய கருத்து.

athira said...

பார்க்கவே சூப்பர்ர்... மட்டின் கறிபோல இருக்கே அவ்வ்வ்வ்வ்..

S.Menaga said...

ஆஹா சூப்பரா இருக்கு..