Monday, March 11, 2013

மட்டன் நூக்கல் (நூல்கோல்) கறி / Mutton Knolkhol Curry

 பொதுவாக நான் மட்டன் சமைக்கும் பொழுது ஏதவாது காய்கறியும் சேர்த்து சமைப்பது  வழக்கம்.அந்த லிஸ்டில் இந்த நூல்கோலும் ஒன்று.வெஜ் மட்டும் சமைப்பவர்கள் இப்படி நூல்கோலை கறி மசாலா கொடுத்து சமைத்தாலும் சுவை அபாரமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்;
மட்டன் - கால்கிலோ
நூல்கோல் - 1 மீடியம் சைஸ் ( 350 கிராம்)
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மல்லி இலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
சில்லி பவுடர் - அரைடீஸ்பூன்
கறி மசாலா  அல்லது குருமா மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 3 டேபிள்ஸ்பூன் + முந்திரி 3 (அரைக்கவும்)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.


 தோலை நன்கு ஆழமாக சீவி எடுக்கவும்,ஏனெனில் மேல் பகுதியில் நார் இருக்கும்.
 நூல்கோலை தோல் சீவி இப்படி துண்டுகளாக நறுக்கி கழுவி எடுத்துக் கொள்ளவும்.மட்டனையும் நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,மல்லி இலை நறுக்கி வைக்கவும்.தேங்காய் முந்திரி அரைத்து எடுக்கவும்.
 குக்கரில் எண்ணெய் சூடேறவும்,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.சிம்மில் வைத்து வதக்கவும்.


 நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி இலை சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.
மிளகாய்த்தூள்,கறிமசாலா சேர்க்கவும்,வதக்கவும்,
 மட்டன் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.நான்கு விசில் மீடியம் ப்லேமில் வந்தவுடன் அல்லது கறி நன்கு வெந்த பின்பு அடுப்பை அணைக்கவும்,.

 குக்கர் ஆவியடங்கிய பின்பு அத்துடன் நறுக்கிய நூல்கோல் சேர்க்கவும்.
 மீண்டும் ஒரே ஒரு விசில் அல்லது வெயிட் போடாமல்  நூல் கோல் வேகும் வரை வைத்து எடுக்கவும்.
 அரைத்த தேங்காய் சேர்க்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்க்கலாம்.
 கலந்து விட்டு உப்பு சரிபார்க்கவும்.
நன்கு கொதித்து  மேலே எண்ணெய் தெளிந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
 சுவையான மட்டன் நூல்கோல் கறி ரெடி.நூல்கோல் சாப்பிட வெண்ணெய் மாதிரி இருக்கும்,டேஸ்ட் முருங்கைக் காய் சதைப் பற்று போல் அத்தனை சுவையாக இருக்கும்.கொதிக்கும் பொழுதே மணம் கமகமக்கும்.நூல்கோல் சத்தை கூகிள் செய்து பாருங்க அசந்து போயிடுவீங்க.
 மதியம் சாதத்துடன் சாப்பிட்டுவிட்டு இரவில் சப்பாத்திக்கு உபயோகிக்கலாம்.இது போல் காளிப்ளவர்,கேரட்,முருங்கை,உருளை, கத்திரி, வாழைக்காய்,சேனைக்கிழங்கு,முள்ளங்கி,வதக்கிய வெண்டைக்காய் வேறு பிரியப்பட்ட காய்கறி எது வேண்டுமானாலும் மட்டன் அல்லது சிக்கனுடன் சேர்த்து சமைத்து அசத்தலாம்.



12 comments:

அமைதிச்சாரல் said...

நல்லாருக்கு ஆசியா.. நான்வெஜ்ஜுக்குப் பதில் உருளைக்கிழங்கும் சேர்க்கலாமில்லையா?..

Asiya Omar said...

சாந்தி வருகைக்கு மகிழ்ச்சி.தாராளமாக சேர்க்கலாம்,தனியாகவே நூல்கோல் கறி அல்லது குருமா கூட செய்யலாம்..

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய காம்பினேசன்... நன்றி...

Vimitha Anand said...

Never tried this combo... Kandippa seidhu paakren

Meena Selvakumaran said...

wonderfully prepared.looks so tasty.

S.Menaga said...

மட்டனும் உருளை+முருங்கைக்காய் தவிர வேறு எதுவும் சேர்த்து செய்ததில்லை...பார்க்கவே அருமையாக இருக்கு.

Priya Suresh said...

Mutton with knolkhol kuda naan samachathey illa super akka.

சே. குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை அக்கா...

இந்த முறையில் செய்து பார்க்கலாம்...

nisha s said...

Supero super!!

Vikis Kitchen said...

நூக்கல் மட்டன் கறி பார்க்கவே ரொம்ப நல்ல இருக்கு. யம்மி !

Premalatha Aravindhan said...

Yummyilicious and fingerlicking gravy, love to enjoy with a bowl of rice...

வானவில் said...

வித்தியாசமான குறிப்பு...இதுவரை நூக்கோல் சமைத்ததில்லை...

உங்கள் செய்முறை செய்ய தூண்டுகிறது சகோதரி...