Tuesday, March 19, 2013

மத்தி (சாளை)மீன் மசாலா / Sardine Fish Masala

தேவையான பொருட்கள்;
சாளை மீன் - 12 (மீடியம் சைஸ்)
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சிறிய பெரிய வெங்காயம் - 1 அல்லது 6 சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி -சிறிய துண்டு
புளி - சிறிது
பூண்டு -  2 - 3 பல்
மல்லி,கருவேப்பிலை சிறிது
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - சிறிது தேவைக்கு.




செய்முறை:
மீன்,எண்ணெய்  தவிர அனைத்தையும்  சேர்த்து விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை மீனுடன் சேர்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெயும் சேர்த்து விரவி வைக்கவும்.ஒரு மணி நேரம் ஊறினால் டேஸ்ட் மிக அருமையாக இருக்கும்.
ஒரு நான்ஸ்டிக் ஃப்ரை பேனில் மீதியுள்ள 2 டீஸ்பூன் எண்ணெய் விடவும்.
சூடானதும் விரவி வைத்த மீனை போட்டு மூடவும்.மீடியம் ப்லேமில் இருக்கட்டும்,தண்ணீர் ஊறி வற்றி வரும்.கவனமாக திருப்பி போடவும்.மசாலா வாடை போய் லேசாக சிவற ஆரம்பிக்கவும் அடுப்பை அணைக்கவும்.இந்த முறையில் செய்யும் பொழுது இலகுவாக மீன் முள் தனியாக எடுத்து விட்டு சாப்பிட எளிதாக இருக்கும்.


சுவையான மத்தி (சாளை) மீன் மசாலா ரெடி.
குறைவான எண்ணெய் உபயோகித்து மசாலாவும் பிரட்டியது போல் இது அருமையாக இருக்கும்.எங்க வீட்டில் ரொம்ப பிடிச்சிருக்கு.உங்களுக்கும் பிடித்திருந்தால் செய்து பாருங்க.

குறிப்பு பகிர்வு : தளிகா. மிக்க நன்றி.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒருமுறை வாங்கி செய்து பார்த்தோம்... 'சல சல' என்று இருந்தது... உங்கள் பாணியில் செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி....

Asiya Omar said...

நன்றி தனபாலன் சார், செய்து பாருங்க,உங்களுக்கும் பிடிக்கலாம்.

Meena Selvakumaran said...

nice healthy version than deep fry,looks great.

Priya Suresh said...

Romba naal achu sala meen saapite,super fish masala akka.

Vimitha Anand said...

Enakku idu romba pudikkum. yum
Win flipkart vouchers from 27coupons.com. Enter now

Shama Nagarajan said...

yummy recipe..thanks for sharing

Ongoing event:
Celebrate - Easter
in my blog.

Asiya Omar said...

Thanks Meena,Priya,Vimitha,Shama for lovely comments and visits..

Jaleela Kamal said...



ம் ம்ம்மத்தி எங்க வீட்டில் என்னை யும் பெரியபையனையும் தவிர சாப்பிடுவதில்லை, எப்பவாவது சாப்பிடனும் போல் இருந்தால்கொஞ்சமாக வாங்கி செய்து சாப்பிடுவது,சுவை அபாரமாக இருக்கும்.

ஸாதிகா said...

இதனை எங்கள் பகுதியில் சூடை மீன் என்போம்.மிகவும் சீப்பான சுவையான மீன்.