Sunday, March 24, 2013

கோவைக்காய் வதக்கல் / Tindora ( Ivy Gourd ) Fry


தேவையான பொருட்கள்;
கோவைக்காய் - கால் கிலோ
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் -கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1-2 டேபிள்ஸ்பூன்(விரும்பினால்)
கருவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
கோவைக்காயை வட்டமாகவோ,நீளவாக்கிலோ நறுக்கி கொள்ளவும்.
கடாயில் கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய கோவைக்காயை சேர்த்து வதக்கவும்.பின்பு மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு தேவைக்கு சிறிதளவு சேர்க்கவும். நன்கு பிரட்டி விடவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டுசுருங்க  வதங்க விடவும். ஐந்து நிமிடத்தில் நன்கு வதங்கி விடும்.தேங்காய்த் துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
சுவையான கோவைக்காய் வதக்கல் ரெடி.

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கோவைக்காய் வதக்கல் அருமை.

நான் இதுவரை கோவைக்காயை சாப்பிட்டதே இல்லை.

தங்களின் இந்தப்பதிவின் மூலம் சாப்பிட்ட திருப்தி கிடைத்தது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

கோவைக்காய் தான் அதிகம் கிடைக்க மாட்டேங்குது...

நன்றி சகோதரி....

Kanchana Radhakrishnan said...

கோவைக்காய் வதக்கல் super.

கோமதி அரசு said...

கோவைக்காய் வதக்கல் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது.
உங்கள் செய்முறை மாதிரி தான் செய்வேன்.
இங்கே சில நேரம் வாங்குவது பழுத்து இருக்கும், சில நேரம் நன்றாக கிடைக்கும்.

Meena Selvakumaran said...

super tindora vathakkal,sometimes simple food is so comfort.

சே. குமார் said...

இங்கு கோவைக்காய் அதிகம் கிடைக்கும். எப்போதாவது சாம்பாரில் சேர்ப்பது உண்டு...
வதக்கல் செய்து பார்க்க வேண்டும்...

இளமதி said...

ஆசியா... நன்றாக இருக்கும் போலுள்ளதே...
ஆனால் என்ன நான் இந்தக்காயை பார்த்ததே இல்லையே...:(
இங்கெல்லாம் கிடைக்காது. ஏசியன் கடைகளிலும் கண்டதே இல்லை.

உங்கள் பதிவிலுள்ள படங்கள் ஆவலைத்தூண்டிவிட்டது.
பகிர்வுக்கு நன்றி ஆசியா...

Priya Suresh said...

Sambar sadhamudan intha fry superaa irrukume..love it akk.

Sangeetha Nambi said...

Well goes with curd and sambar rice...
http://recipe-excavator.blogspot.com

வெங்கட் நாகராஜ் said...

நானும் இப்படித்தான் செய்வேன். - தேங்காய் சேர்க்காமல்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

http://www.en-iniyaillam.com/2013/03/passion-on-plate.html

ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு, பரிசுக்குத்தேர்வாகியுள்ள தங்களுக்கு என் அன்பான மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

ஸாதிகா said...

இது வதக்குவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும் எனினும் அதன் சுவைக்காக எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம்.தாளிக்கும்பொழுது நிறைய கடலைபருப்பை சேர்த்தால் சுவை அதிகமாகும் தோழி.

Asiya Omar said...

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.