Monday, April 1, 2013

முட்டை பாலடை / Mutta Pal Ada

 தேவையான பொருட்கள்;
மைதா மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
முட்டை - 1
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - கால் டீஸ்பூன்
சோடா உப்பு - பின்ச்
உப்பு - 2 பின்ச்
தண்ணீர் - 2. 1/2-  3 கப்

பூரணத்திற்கு ;
தேங்காய் துருவல், சீனி தேவைக்கு.

அடையின் அளவைப் பொருத்து பத்து முதல் எண்ணிக்கை வரலாம்.

செய்முறை:
மிக்ஸி ஜாரில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ஆப்ப மாவு பதத்திற்கு அடித்துக் கொள்ளவும்.
அதனை ஒரு பவுலில் ஊற்றி நன்கு கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
பின்பு ஒரு நான்ஸ்டிக் தவாவில் லைட்டாக எண்ணெய் துடைத்து எடுக்க வேண்டும்.அதனில் ஒரு குழிக் கரண்டி அளவு மாவை வட்டமாக மெலிதாக விடவும்.கரைத்த மாவு பதமே நமக்கு மெலிதான் துணி போன்ற  அடையைத் தான் தரும்.திருப்பி போடக் கூடாது.முறுகக் கூடாது.மூடி திறந்தால் வெந்து விடும். இந்த பதத்திற்கு அடை ஒட்டவே ஒட்டாது.வெந்தவுடன் தானாக எழும்பி வந்து விடும்.
சுட்ட அடையில் ஒவ்வொன்றிலும் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் தூவி,தேவைக்கு சீனியும் தூவி நல்ல இறுக்கமாக சுருட்டி வைக்கவும்.இப்படியே சுட்ட அடை அனைத்தையும் ரெடி செய்து கொள்ளவும்.
(பூரணத்தை நாம் தனியாக தயார் செய்து வைத்தும் உள்ளே வைத்து சுருட்டலாம்.அல்லது அப்ப அப்ப தேங்காய் துருவல் சீனி தூவி சுற்றியும் வைக்கலாம்.தேவைக்கு தேங்காய் துருவல் சீனி கலந்து வைத்து,அதனை இரண்டு டேபிள்ஸ்பூன் வைப்பது இலகுவாக இருக்கும்.)
சுவையான கேரளா(பாலக்காடு) முட்டைபாலடை ரெடி.
குறிப்பு பகிர்வு - Saute,Fry n Bake .மிக்க நன்றி .
வித்தியாசமான சுவை,நீங்களும் செய்து பாருங்க.




13 comments:

Sangeetha Nambi said...

New dish to me... Looks yummy !
http://recipe-excavator.blogspot.com

ராதா ராணி said...

புதுசா இருக்கு.. சீக்கிரம் செய்யற குறிப்பாவும் இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கணும் ஆசியா..

திண்டுக்கல் தனபாலன் said...

செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

தளிகா said...

முட்டை பாலடை குறிப்பை ஆசை வந்தூடனே செய்து பார்த்தாச்சு...அருமையோ அருமை..எனக்கு ரொம்ப பிடிச்ச குறிப்பு ஆசியா அக்கா

S.Menaga said...

Very Innovative recipe,looks super!!

Vimitha Anand said...

New one akka. will try soon..
Win flipkart vouchers from 27coupons.com. Enter now
Come participate and win healthy Hudson canola oil hampers

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான குறிப்பு ஆசியா! படங்கள் உடனேயே செய்து பார்க்கத் தூண்டுகின்றன!!

Mahi said...

வித்யாசமா இருக்கு ஆசியாக்கா! ஒரு ரெண்டு பாலடைய குடுத்தீங்கனா டேஸ்ட் பண்ணி பார்த்துட்டு அப்புறமா ட்ரை பண்ணிப் பார்ப்பேன்! ;) :)

vanathy said...

good one.

VijiParthiban said...

நான் மைதா மாவில் மட்டும் இதே போன்று செய்வேன் அக்கா .... இதையும் செய்து பார்த்துவிட வேண்டியதுதான் ......

ஸாதிகா said...

அட வித்த்யாசமாக இருக்கே!

nisha s said...

Yummy post sis :)

Asiya Omar said...

பார்வையிட்ட மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.