Friday, November 15, 2013

சமைத்து அசத்தலாமில் சிறப்பு விருந்தினர் பக்கம் அறிமுகம் / Guest Post

சமையற்கலை என்பது அனைவருக்கும் சுலபாய் வரக்கூடியது.கொஞ்சம் உணவில் ஆர்வம் இருந்தால் போதும். சமையல் செய்வதில்  ஆர்வம் வந்து விடும்.ஆர்வம் உள்ளவர்கள் யாராய் இருந்தாலும் என்னைப் பொருத்தவரை மிக இனிமையானவர்களே ! அவர்கள் கையால் எளிய மோர் வீட்டில் உள்ளவர்களுக்குப்  பரிமாறினாலும் அது அமிர்தமே!சிறு குழந்தைகள், தான் உண்ணும் பொழுது அன்பாய் அவர்கள் உணவை எடுத்து  நமக்கு ஊட்டி விட்டால் எத்தனை இன்பம் கிடைக்குமோ அத்தனை மகிழ்ச்சியை தரக் கூடியது இதில் பகிரப் படும் ஒவ்வொரு பகிர்வும்.

நான் திருமணத்திற்கு பின்பு தான் சமைக்க ஆரம்பித்தேன், அது மாதிரி புதிதாக சமைக்க ஆரம்பிப்பவர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என்று ஆரம்பித்தது தான் இந்த சமைத்து அசத்தலாம்.
இன்றும் நான் பழகும் ஒவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு தான் சமைத்துப்  பார்க்கிறேன்.உங்களிடம் பகிர்கிறேன்.இந்த வலைப்பூவை வெற்றியாக்கி தந்த ஒவ்வொரு அன்புள்ளத்திற்கும், ஏன் ஒரு வருகை தந்திருந்தால் கூட,ஒரு கருத்து தெரிவித்திருந்தால் கூட அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பையும்,நன்றியினையும்,மகிழ்ச்சியினையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் பகுதி ஆரம்பித்ததின் நோக்கம் உணவு மீது ஆர்வம் கொண்ட என் அன்பான நட்புறவுகளையும் அவர்களின் சுலபமான ருசியான சமையல் குறிப்பையும்,வலைப்பூ விபரங்களையும் பகிர வேண்டும் என்ற ஆர்வமே காரணம். நானே சமையல் செய்து, நானே குறிப்பு பகிர்ந்து கொண்டிருந்தால் தோழமைகளின் சமையலை நாம் எப்படி தெரிந்து கொள்வது. மாற்றம் வேண்டாமா ? விருப்பமுள்ளவர்கள் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் பகிரலாம்.சமையல் குறிப்பு அனுப்ப தொடர்பு கொள்ள வேண்டிய ஈ மெயில் முகவரி asiyaomar@gmail.com அல்லது asiya.omar@yahoo.com .தொடர்பு கொள்ளுபவர்கள் வரிசைப்படி அவர்களின் குறிப்புக்கள் பகிரப்படும். நீங்கள் அனுப்பிய சமையற் குறிப்பு என்னால் செய்து பார்க்கப்பட்டு,உங்கள் குறிப்பின் கீழ் படம் இணைக்கப் படும். சமையற் குறிப்புக்கள் வருகையைப் பொருத்து வெள்ளிக் கிழமைகளில்  பகிரப்படும்.

இதன் சிறப்பம்சம் என்னவெனில் வலைப்பூ அல்லாதவர்கள் கூட தங்களைப் பற்றிய சுய அறிமுகத்தோடு விரும்பினால் தங்களின் புகைப்படம், உங்களால் அடிக்கடி சுலபமாக வீட்டில் செய்யப்படும்,  அனைவரும் ரசித்து உண்ணும் சமையல் குறிப்பு, மற்றும் செய்த சமையற்குறிப்பின் ஒன்று அல்லது மேற்பட்ட படங்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.

இதில் உங்களைப் பற்றிய பொதுவான கலந்துரையாடலும் இடம் பெறும். நாம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதோடு அவரவர் வீட்டின் உணவு  பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள முடியும். சிறப்பு விருந்தினர்கள் கலந்துரையாடலுக்கு பதிலாக ஹெல்த் டிப்ஸ், அழகு குறிப்பு, சமையல் டிப்ஸ் இப்படி எது வேண்டுமானாலும் கொடுக்கலாம்.


சமையலில் ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஏன் ஆண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் உட்பட அவர்களின்   சுய அறிமுகம்,விரும்பினால் புகைப்படம், தங்கள் விருப்பமான உணவு,பகிரப் போகும் சமையற் குறிப்பு என்று அனுப்பினால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
முதல் குறிப்பை பகிரப் போகும் அதிர்ஷ்டசாலி யாரோ!



விரைவில் சந்திப்போம் அசத்தலான குறிப்புகளோடு.:) !.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இது வரை சிறப்பு விருந்தினர் பகுதியில் கலந்து  கொண்டு கௌரவப்படுத்தியவர்கள்  விபரம் வருமாறு:
பெயரை கிளிக் செய்தால் அவங்க வலைப்பூவிற்குச் செல்லலாம், குறிப்பை பார்க்க ரெசிப்பியை கிளிக்கவும்.

1. திருமதி.ஸாதிகா ஹஸனா - இடியாப்பச் சோறு - ருசிக்க கிளிக்கவும்.
2.திருமதி மேனகா சத்யா - செட்டிநாடு வெஜ் புலாவ் 
3.செல்வி.S.முபஷ்ஷரீனா - எலையாடை 
4.திருமதி சித்ரா சாலமன் - முழு வான்கோழி ரோஸ்ட்
5.திருமதி சாரதா - காளான் குழம்பு
6.திருமதி சுஜிதா ரூபன் - சிக்கன் குரோகட்ஸ்
7.திருமதி உமா சங்கர் - பாவ் பாஜி
8. திருமதி ஹஸீனா செய்யது - ரெயின்போ கிண்ணத்தப்பம்.
9.திருமதி மனோ சாமிநாதன் - பொங்கல் குழம்பு 
10.திருமதி ப்ரியா மோகன் - மீன் குழம்பு (கொங்கு ஸ்டைல்)
11. திருமதி சங்கீதா செந்தில் - சாத பக்கோடா
12.திருமதி சிவகாமசுந்தரி ஜெய்சங்கர் - அவகாடோ டிப்.
13.திருமதி ஜலீலா கமால் - கார்ன் & பீஸ் மணி பேக்.
14.திருமதி காயத்ரி குமார் - வெனிலா சுவிஸ் ரோல் 
15. திருமதி ஷமீலா முபீத் - இறால் அடை.
16.திருமதி ஆதி வெங்கட் - பனீர் பராட்டா
17. திருமதி ஷாமா நாகராஜன் - மதுரை மட்டன் பிரியாணி
18.திருமதி பினுஷா ஆஷிக் - ட்ராகன் சிக்கன்
19.திருமதி தஸ்னிம் பாத்திமா - பேச்சிலர்ஸ் சிக்கன் கூட்டு
20.ஸாஹித் உமர் - பேக்ட் மீட் பாஸ்தா
21.திருமதி ஹிமாயா நிஸ்டார் - கிரில்டு சிக்கன்.
22. திருமதி ஃபௌசியா சம்சுதீன் - ப்ரெட் ஹல்வா
23.திருமதி சிவகாமசுந்தரி ஜெய்சங்கர் -மாங்காய் இஞ்சி மோர் குழம்பு
24.திருமதி பத்மப்ரியா செந்தில் - அசைவ ஸ்பெஷல்
25.திருமதி.ரஃபீகா & திருமதி அஸ்மா - மதுரை ஸ்டைல் மட்டன் பிரியாணி & மட்டன் தால்ச்சா.
26, திருமதி நிஷா காஜா - ஸ்டஃப்ட் கோவைக்காய் மசாலா
27.திருமதி ஃபரின் அஹமது -  மைக்ரோவேவ் பேசன் லட்டு
28. திருமதி சண்முக வடிவு - ஆரோக்கிய உணவுகள்
29.திருமதி நிஷா சலீம்- தஞ்சாவூர் தம்ரூட்.
30.திருமதி கசானா ரசூல் - நியுடெல்லா ஐஸ் கிரீம்
31.திருமதி பாத்திமா இப்ராஹிம் - நர்கிஸ் கோஃப்தாவும் உன்னியப்பமும்.
32.திருமதி.சிராஜ் முனீரா - ஆட்டுக்கால் பாயா
33.திருமதி ஹமீதா ஹாரிஸ் - மட்டன் சாப்ஸ்
34.திருமதி. சுல்தானா நஸீம் - மலபார் மீன் பிரியாணி
35.திருமதி.தில்லி ராணி - தேங்காய்ப்பால் சாதம், சிக்கன் பெப்பர் கறி

51 comments:

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் தோழி.நல்ல ஒரு முயற்சி.வெற்றி கிட்டட்டுமாக!

உண்மையைச்சொல்லப்போனால் வித விதமாக புது வகையான சமையல்களை ருசி பார்க்கும் ஆர்வம் எனக்கு எப்போதும் சமைப்பதில் இருந்தது இல்லை.சொல்லப்போனால் குறைந்து கூட வருகிறது.ஓரளவு வித விதமான சமையல்கள குறிப்புகள் பார்க்காமலேயே செய்ய முடியும்.ஆனால் முயற்சிகளை தொடர்வதில்லை.:0 உங்கள் போஸ்ட் பார்த்ததும் என்னுள்ளும் ஆர்வம் வந்து விட்டது.கண்டிப்பாக நானும் உங்கள் அறிமுகத்தில் இடம் பெற வேண்டும்.

Asiya Omar said...

அடேடே, ஸாதிகா முதல் கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
நீங்கள் சொல்வது சரி,எனக்கும் சமையலில்,சாப்பாட்டில் ஆர்வம் குறைந்து விட்டது.வயது ஏற ஏற அப்படித்தான்.ஹி.ஹி.
விருந்தினர்கள் வரும் பொழுது அசத்தலாக சமைப்பது மற்ற படி இங்கு வீட்டில் சமைப்பது மிகக் குறைவு தான்.சாப்பிட ஆள் இல்லை.அன்புத் தொல்லை தாங்க முடியலைன்னு குற்றச்சாட்டு தான்.மேனகா குறிப்பு அனுப்புவதாய் மேசேஜ் செய்திருக்கிறார்கள்.மிக மகிழ்ச்சி தருவதாய் இருக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் சகோதரி...

திண்டுக்கல் தனபாலன் said...

கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை...

Shama Nagarajan said...

super akka..wish to do a guest post for u..

இளமதி said...

அருமையான யோசனை ஆசியா!
நான்.. எனது என்று வாழும் உலகில் நீங்களும்.. உங்களதும் என்று
நல்ல ஒரு சினேகிதத்துவமான சிந்தனை!
உண்மையில் உங்கள் எண்ணத்திற்குச் செயல் வடிவ முயற்சிக்கு
உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

நானும் மனதில் ஏற்பட்ட சில தாக்கங்களால்
சமையலில் பெரிதாக நாட்டம் காட்டாத நிலை.
யாரும் விருந்தினர் வந்தால் செய்வதுடன் போகிறது.
முடிந்தால் என் பங்களிப்பினையும் தருவேன்.

தொடரவும் சிறப்பாக உங்கள் முயற்சி அமையவும் வாழ்த்துக்கள் ஆசியா!

Asiya Omar said...

வை.கோ சார் வாழ்த்திற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவும் இந்தப் பகுதிக்கு வேண்டும்:)!.

தனபாலன் சார் உங்களை எப்படி பாராட்டுவது? எல்லோரும் திணறித்தான் போவார்கள்.
முடிந்தால் தங்கள் பகிர்வும் இடம் பெற ஆசை.மிக்க நன்றி.

Asiya Omar said...

வாங்க ஷாமா, மிக்க மகிழ்ச்சி, நன்றி.விரைவில் இப்பகுதியில் நான் கேட்ட படி குறிப்புடன்,தங்கள் வலைப்பூ பற்றிய அறிமுகச் சுருக்கமும் அனுப்பி வையுங்கள்.

Asiya Omar said...

வாங்க இளமதி, அளவிட முடியா மகிழ்ச்சி.இலங்கைக் குறிப்பு ஒன்று வரப் போகிறதே என்று தான்.நான் கேட்ட படி விரைவில் அனுப்பி வையுங்கள்.மிக்க நன்றி.

vanathy said...

Congrats. If I get time i will participate.

Saratha said...

நான் ஊருக்கு சென்று விட்டதால் உங்கள் பகிர்வை பார்க்க முடியவில்லை.இன்று தான் பார்த்தேன்.உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.எனக்கும் உங்கள் அறிமுகத்தில் இடம் பெற ஆசையாக இருக்கிறது.

S.Menaga said...

இந்த முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் அக்கா!!

எம் அப்துல் காதர் said...

நல்ல விஷயம். தொடருங்கள் சகோ :)

Asiya Omar said...

வானதி! வாங்க! பார்த்து எவ்வளவு
நாளாச்சு.மிக்க மகிழ்ச்சி.உங்க குறிப்பையும் மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Asiya Omar said...

சாரதா இன்று இதனை பகிர்ந்தேன்.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.விரைவில் தங்கள் விபரம் குறிப்பு என் மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள்.மிக்க மகிழ்ச்சி.

Asiya Omar said...

மேனகா வாழ்த்திற்கு மிக்க நன்றி.உங்கள் குறிப்பை விரைவில் எதிர் பார்க்கிறேன்.

Asiya Omar said...

சகோ.அப்துல் காதர் வாங்க, ஆஹா ! வருகைக்கு நன்றி,மகிழ்ச்சி.உங்க நாகூர் ஸ்பெஷல் எதிர்பார்க்கலாமா? வீட்டம்மாவிடம் நான் குறிப்பிற்கு அப்ளிகேஷன் போட்டிருப்பதை தெரிவித்து விடுங்கள்.

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல தொடக்கம். பலருக்கும் பயனாகக் கூடிய முயற்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஆசியா!

Asiya Omar said...

ராமலஷ்மி வாங்க, தங்கள் வாழ்த்து பாராட்டு மிக்க மகிழ்வைத் தந்தது.உங்கள் நெல்லை சைவ சமையல் குறிப்பு ஒன்றை எதிர் பார்க்கிறேன் உங்கள் அசத்தலான புகைப் படத்தோடு.மிக்க நன்றி.

Snow White said...

akka .. vazhththukkal .. puthiya muyarchi...enathu blogla vantha kuripai anupalama or puthiya kurippu than anupanuma?

asha bhosle athira said...

ஆவ்வ்வ்வ்வ்வ் எனக்கு பாதி புரியல்ல.. இருப்பினும் முதலில் வாழ்த்திடுறேன்ன்...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆசியா.

இதில் ஏதும் போட்டி என இல்லைத்தானே?..

இது எப்பவும் பேமனண்டாக இருக்கப் போகும் ஒரு புளொக் தானே?...

நானும் அனுப்ப நினைக்கிறேன்ன்.. ஆனா விடுமுறை காலம் நெருங்குகிறது, அதனால் கொஞ்சம் பிசியாகிறேன்ன்:).. பார்க்கலாம்.

எப்பவும் இருக்குமெனில்.. எப்பவும் அனுப்பலாம்தானே? ஒண்ணும் அவசரமில்லையே?

asha bhosle athira said...

கீழே லிங் இணைத்திருக்கலாமே ஆசியா. இது ஒண்ணொண்ணா பார்த்தெல்லோ ரைப் பண்ண வேண்டியதாயிருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

வெங்கட் நாகராஜ் said...

அருமையான முயற்சி. சமைத்து அசத்தப் போகும் அனைத்து நட்புகளுக்கும் வாழ்த்துகள்!

Asiya Omar said...

Snow White வாங்க.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.சுலபமான உங்க ஹிட் ரெசிப்பி எதுவானாலும் பகிரலாம்.வாசகர்கள் பார்த்தவுடன் செய்து பார்க்கும் ஆவலை தருவதாய் இருக்க வேண்டும்.அவ்வளவே !என் மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள்.நான் பின்பு தொடர்பு கொள்வேன்.நன்றி.

Asiya Omar said...

ஆஆஆ இதென்னது பெயர் ஆஷா போஸ்லே அதிராவோ ! இதுவும் நல்லாத்தான் இருக்கு.இது போட்டி எல்லாம் இல்லை. நீங்க எப்பொழுது வேண்டுமானாலும் என் மெயில் ஐடிக்கு குறிப்பு அனுப்பலாம்.பின்னர் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன்.நன்றி,மகிழ்ச்சி.

Asiya Omar said...

சகோ வெங்கட்,வாங்க! ஆதி கிட்டே சொல்லுங்க,இல்லையெனில் தாங்கள் சமைப்பதாய் இருந்தாலும் அவசரத்திற்கு செய்து அசத்தும் ஒரு ஈஸி பேச்சிலர் சமையல் அனுப்பி வையுங்களேன்.கருத்திற்கு நன்றி மகிழ்ச்சி.

Thenammai Lakshmanan said...

அருமையான முயற்சி ஆசியா. நானும் அனுப்புகிறேன். டைம்தான் கிடைக்கலை :)

Asiya Omar said...

தேனக்கா,வாங்க! பத்திரிக்கை உலகில் பிஸியான நேரம் ஒதுக்கி வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி.நிச்ச்யம் அனுப்புங்க அக்கா, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,உங்க செட்டிநாடு ஸ்பெஷல் உணவு வகைகள்.மிக்க நன்றி.

சே. குமார் said...

நல்லதொரு முயற்சி.... வாழ்த்துக்கள் அக்கா....

Vijiskitchencreations said...

All the best! Good Creative thinking!

Asiya Omar said...

குமார் வாழ்த்திற்கு நன்றி.நீங்க உங்க ரூமில் சமைக்கும் பேச்சிலர் சமையல் கூட அனுப்பி வைக்கலாமே !

விஜி வாங்க, கேரள ஸ்டைல் சைவ சமையலை இங்கு பகிரலாமே! நேரம் கிடைக்கும் பொழுது அனுப்பி வையுங்க.

இமா said...

அடடா! அருமையான பகுதி ஆரம்பித்திருக்கிறீர்கள் ஆசியா. பாராட்டுக்கள்.

சூப்பர் ஸாதிகா. நிச்சயம் சமைத்துப் பார்ப்பேன்.

Nithu Bala said...

Congrats Akka. Great Job. I would like to participate in your guest series. I will mail you regarding this.

Asiya Omar said...

இமா வாங்க, பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி.நீங்க மெசேஜில் தெரிவித்த படி மெதுவாகவாவது அனுப்பி வைக்க வேண்டும்.



நிதுபாலா வாங்க. நீங்க ஆங்கில வலையுலகில் ப்ளாக்கர்ஸ் அறிமுகப் படுத்தியது எல்லாம் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்.நீண்ட நாள் நினைத்து இப்பொழுது தான் கெஸ்ட் போஸ்ட் போடும் ஆர்வம் நிறைவேறி இருக்கு.விரைவில் அனுப்பி வையுங்க.மகிழ்ச்சி கலந்த நன்றி.

தெய்வசுகந்தி said...

Great effort! I'll try to send too

Asiya Omar said...

தெய்வசுகந்தி வாங்க, நிச்சயம் அனுப்பி வைங்க. .கருத்திற்கு மகிழ்ச்சி.

priyasaki said...

தாமதமான வாழ்த்துக்கள் ஆசியா.உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Chitra said...

Very nice concept. Best wishes, akka!

அம்பாளடியாள் வலைத்தளம் said...

பலருக்கும் தங்கள் பகிர்வுகள் பயன்பட என் மனமார்ந்த
வாழ்த்துக்கள் தோழி .தொடரட்டும் தங்கள் பயணம் .

Asiya Omar said...

ப்ரியசகி வாங்க, நீங்களும் உங்கள் குறிப்பு மற்ற விபரங்கள் பகிரலாம் தோழி.

Asiya Omar said...

சித்ரா வாங்க,இங்கு வந்து எத்தனை மாதங்கள் ஆகிவிட்டன,நிச்சயம் என் விருந்தினர் பகுதிக்கு உங்கள் பகிர்வை அனுப்பி வையுங்கள்.உங்கள் வலைப்பூவிலும் மீண்டும் எழுதத் தொடங்குங்கள்.

Asiya Omar said...

அம்பாளடியாள் வாங்க, வாழ்த்திற்கு மிக்க நன்றி,வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

நல்ல தொடக்கம். நானும் ரொம்ப நாட்களாக எண்ணி இருந்தது ,ஆங்கில வலை தோழிகள் எல்லாரும் கெஸ்ட்போஸ்ட் பகிர்ந்து கொள்வது போல் இனி தமிழிலும் கலக்கலாம் பல தோழிகளின் சமையலை இங்கு காணலாம்.என்ன பூஸார் ஆஷா போஸ்லேவா எப்ப மாறினார்..?

Asiya Omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள்.மகிழ்ச்சி.

Rupan com said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள். சென்று பார்வையிட இதோ.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_13.html?showComment=1386903488180#c7173699904790276264

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Asiya Omar said...

மிக்க நன்றி ரூபன்,பகிர்வுக்கு நன்றி.வருகைக்கு மகிழ்ச்சி.

Kamatchi said...

சிறப்பு விருந்தினர் பக்கம் சமைத்து அசத்தலாம் மிக்க நல்ல யோசனை. பிறர் சமையலை போற்றுவதற்கு அருமையான வாய்ப்பு. வெற்றி அடைந்து கொண்டிருப்பீர்கள். சாவகாசமாகப் பார்க்கிறேன். வாழ்த்துகள். அன்புடன் சொல்லுகிறேன்.

Asiya Omar said...

காமாட்சிமா வாங்க,வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சிமா,மனமார்ந்த நன்றிகள் பல.

Umar Farooq said...

Hi Team,

Do you have any whatsapp Group for this ?

Asiya Omar said...

டீம் எல்லாம் இல்லை.இந்த வலைப்பூவில் பகிர்வது நான் மட்டுமே.வாட்ஸப் குரூப் இல்லை.நன்றி.