Thursday, December 21, 2017

சேலம் பிச்சு போட்ட கோழி / Salem shredded chicken


 தேவையான பொருட்கள்;-
சிக்கன் - கால் கிலோ
பெரிய வெங்காயம் -2
கீறிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு  விழுது- 1 தேக்கரண்டி
சிக்கன் வேக வைக்க மஞ்சள் தூள், உப்பு கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் -அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மிளகு பொடித்தது - 1 தேக்கரண்டி ( காரம் தேவைக்கேற்ப)
உப்பு - சுவைக்கேற்ப.
மல்லி கருவேப்பிலை - சிறிது.
பரிமாறும் அளவு - 2 நபர்.
செய்முறை:-
எலும்பில்லா சிக்கனை வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
 இஞ்சி பூண்டு விசுது சேர்த்து வதக்கவும்.

 நன்கு வதங்கியதும் வேகவைத்து உதிர்த்த சிக்கன் சேர்க்கவும்.
 மசாலா தூள் வகைகள் சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
 தயார் ஆனவுடன் பொடித்த மிளகு தூவி பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
 நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.
சேலம் பிச்சுப் போட்ட கோழி தயார். பரிமாறுவதற்கு முன் பாதி காலியாகிடும்.
பக்க உணவாகப் பரிமாறவும்.

Tuesday, December 19, 2017

ஈசி முதபல் /EASY MUTHABAL

தேவையான பொருட்கள்;-
பெரிய வயலட் கத்திரிக்காய் - 1 ( 400 -500 கிராம்)
தகினா பேஸ்ட் (எள்ளு)- 2 மேஜைக்கரண்டி
கெட்டி தயிர் - 2 மேஜைக்கரண்டி
உப்பு -சுவைக்கு
விரும்பினால் எலுமிச்சைச் சாறு - சில துளிகள்.

செய்முறை:-
கத்திரிக்காயை சுட்டுத்தான் செய்ய வேண்டும்.
இந்த முறை ஏர் ஃப்ரையரில் சுட்டு பார்த்தேன்.முற்சூடு செய்யவும். 10 நிமிடம் 200 டிகிரி வெப்பநிலையில் ஒவ்வொரு பக்கமும் வைத்து எடுக்கவும். சுடுவது சுலபம்.ஆனால் மெதுவாக இல்லை.
தோல் உரிக்க இலகுவாக இருந்தது.
பொதுவாக கேஸ் அடுப்பில் அல்லது ஓவனில் சுட்டால் ஸ்பூனால் அல்லது கையால் கூட மசித்து விடலாம்.
கத்தி கொண்டு பொடியாக நறுக்கினேன். மசுமையாக இல்லாததால்
ப்லெண்டரில் மசித்து எடுத்தேன்.

அத்துடன்,தயிர்,தகினா பேஸ்ட் சேர்த்து கலந்து சில துளிகள் எலுமிச்சை சாறு,சுவைக்கு சிறிது உப்பு சேர்த்து ஆலிவ் ஆயிலும் சேர்த்து கலந்தால் தயார்.
சுவையான  முதபல் தயார்.
குபூஸ் கிரில் சிக்கனுடன் பரிமாறவும்.

Sunday, December 17, 2017

புதினா சட்னி / Mint chutney

இந்த முறையில் செய்து பாருங்க,ரொம்பச் சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்;-
புதினா இலைகள் - ஒரு சிறிய கட்டு
ஒரு பெரிய வெங்காயம்
பூண்டு - சிறிய 10 பற்கள்
பச்சை மிளகாய் - 4
பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி
புளி சிறிது
எண்ணெய் வதக்க - 2 தேக்கரண்டி.
உப்பு தேவைக்கு.
செய்முறை:-
புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி வைக்கவும்.
 வாணலியில் எண்ணெய் சூடு செய்து தேவையான பொருட்கள் அணைத்தும் சேர்த்து வதக்கவும்.
 ஆற வைக்கவும்.

 மிக்சி ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
சுவையான புதினா சட்னி தயார். இட்லி, தோசை,புலாவுடன் பரிமாறலாம்.

Tuesday, November 21, 2017

அரபிக் ஸ்டைல் மட்டன் பிரியாணி / Arabic style mutton briyani

தேவையான பொருட்கள் :-
மட்டன் பெரிய துண்டுகளாக - 400 கிராம்
பாசுமதி அரிசி - 200 கிராம்
பட்டர் - 20 அல்லது 25 கிராம் கியூப்
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி - 1
பச்சை மிளகாய் -2 ( விரும்பினால்)
சூப் கியூப் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
காய்ந்த எலுமிச்சை - 1
மசாலா பொடிக்க:
பட்டை சிறிய துண்டு -1
மிளகு - 1 அல்லது அரை  தேக்கரண்டி
முழு மல்லி - 1 தேக்கரண்டி

பரிமாறும் அளவு 2- 3 நபர்கள்.

செய்முறை:-
 மட்டனை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
அரிசியையும் அலசி ஊற வைக்கவும்.

 பொடிக்க வேண்டியதை எடுத்து பொடித்துக் கொள்ளவும்.
 ஒரு பேனில் பட்டர் போட்டு உருகவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நான் ஸ்லோ குக்கரில் செய்யப் போவதால் இப்படி பேனில் முதலில் வதக்கி சேர்க்கிறேன், நீங்கள் பாத்திரம் அல்லது குக்கரில் செய்வதாய் இருந்தால் நேரடியாக அதிலே செய்யலாம்.

 இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

 பொடித்த மசாலா சேர்க்கவும்.


 மட்டன் சேர்த்து பிரட்டவும்.
 தக்காளி விழுது பச்சை மிளகாய் சேர்க்கவும்.

கறி மூழ்கும் அளவு  தண்ணீர் ,விரும்பினால் சூப் கியூப் சேர்க்கவும்.

 ஸ்லோகுக்கரை ஆன் செய்து முற்சூடு செய்யவும்.மீடியம் வெப்ப நிலை செட் செய்யவும். தயாராய் உள்ள கறியை சேர்க்கவும்.காய்ந்த எலுமிச்சையும் அத்துடன் சேர்க்கவும்.மூடவும்.
 சாஃப்டாக வேகும் வரை விடவும். இரண்டு மணி நேரம் கூட ஆகலாம். கறி பஞ்சு மாதிரி வேகும். உடையாது.டேஸ்ட் அதன் இயற்கை சுவையிலேயே இருக்கும்.
ஸ்லோகுக்கரில் வேக வைப்பதால்  கறியில்  உள்ள கொழுப் பெல்லாம் வெளியே கக்கி விடும்.
 அரிசியை வடித்தும் தட்டலாம்.அல்லது ஊறியதையும் தண்ணீர் வடித்து சேர்க்கவும்.கறியில் உள்ள தண்ணீரே போதுமானதாய்  இருக்கும்.
சோறு வெந்ததும் அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்.
திறந்து பிரட்டி எடுத்து பரிமாறவும்.


 சுவையான அரபிக் ஸ்டைல் பிரியாணி தயார்.  வெள்ளரி,வெங்காயம்,லெட்டூஸ்,  தக்காளி நறுக்கி சாலட் செய்து பரிமாறவும்.
தக்காளி சாஸ் அரபிக் முறையில் செய்ய பெரிய தக்காளி,சிறிய பச்சை மிளகாய், ஒரு டேபிள்ஸ்பூன் மல்லி இலை,பின்ச் சீரகத்தூள்,பெரிய பின்ச் பொடித்த மல்லி உப்பு  சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து சிறிது லூசாக பரிமாறவும்.





Sunday, November 19, 2017

காடை மிளகு ரோஸ்ட் / Quill pepper roast

தேவையான பொருட்கள் :-
சுத்தம் செய்த காடை - 6 எண்ணம்
காடையை அலச மஞ்சள் தூள் 1டீஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை தேக்கரண்டி (ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
மிளகாய்த்தூள்  - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
லேசாக மணம் வர வறுத்து பொடித்துக் கொள்ள :-
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மேலும் காரம் விரும்பினால் ஃப்ரெஷாக மிளகு பொடித்து தூவவும்.
தாளிக்க மரச்செக்கு நல்லெண்ணெய் - 4 -6   மேஜைக்கரண்டி
சோம்பு,மிளகு தலா - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கருவேப்பிலை சிறிது
நறுக்கிய மல்லி இலை சிறிது.

செய்முறை:-

 காடையை தோல் நீக்கி நன்கு அலசிக் கொள்ளவும். ஆங்காங்கு கீறி விட்டுக் கொள்ளவும்.
 கடைசியாக ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் தண்ணீரில் போட்டு சிறிது ஊற விடவும்.
 தண்ணீர் வடித்து வைக்கவும்.
 கடாயில் நல்லெண்ணெய் விடவும். சூடானவுடன் முழு மிளகு,சோம்பு,கருவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்க்கவும்.
 எல்லாம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
 நன்கு வாடை போக வதக்கவும்.
 தக்காளி சேர்க்கவும்.
 சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.
 மசாலா வகைகள் சேர்த்து பிரட்டவும்.
 சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

 எல்லாம் கூட்டு போல் ஆனவுடன் காடையச் சேர்க்கவும்.முழுதாகவோ பாதியாக நறுக்கியோ சேர்க்கலாம்.

 பிரட்டி விட்டு, மூடி போட்டு வேக விடவும்.

 வெந்ததும் உப்பு சரி பார்க்கவும். வறுத்து பொடித்ததைச் சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி சிறிது தண்ணீர் தெளித்து திரும்ப மூடி சிறிது எல்லாம் சேர்ந்து கொதிக்கட்டும்.

 திறந்து நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டவும்.கால் மணி நேரத்தில் தயார் ஆகிவிடும்.
 காரம் தேவைப்பட்டால் ஃப்ரெஷாக மிளகு பொடித்து மேலே தூவி பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
 சுவையான  காடை மிளகு ரோஸ்ட் தயார். செமையாக இருக்கும்.
எலும்பு கூட மெதுவாக இருக்கும்.
பக்க உணவாகப் பரிமாறலாம்.பிடித்திருந்தால் நீங்களும் செய்து பாருங்க.