Monday, May 29, 2017

சிக்கன் பஜ்ஜி /Chicken Bajji

தேவையான பொருட்கள்:-
சிக்கனில்  ஊற வைக்க:-
சிக்கன் லெக் பீஸ்   துண்டுகள் -8
(அரைக் கிலோ - 600 கிராம் தான் இருக்க வேண்டும் )
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
லெமன் ஜூஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
எல்லாம் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.


பின்பு இட்லி பாத்திரத்தில் வைத்து 10  -15 நிமிடம்  ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இட்லி தட்டில் சிக்கனில் இருந்து ஊறிய தண்ணீர் இருக்கும்.



ஆறிய பின்பு அந்த தண்ணீரை ,சூப் போன்று இருப்பதால் அதனை பஜ்ஜிக்கு கரைக்கும் பொழுது சேர்த்துக் கொண்டேன்.
பஜ்ஜி மாவிற்கு:-
தே.பொ:-
 கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்லார் - 1 டேபிள்ஸ்பூன்
காரத்திற்கு மிளகாய்த்தூள் கால்   டீஸ்பூன்,
மஞ்சள் தூள் இரண்டு பின்ச்,
பெருங்காயத்தூள் இரண்டு பின்ச்,சுவைக்கு உப்பு,சிறிய பின்ச் சோடா உப்பு, விரும்பினால் பஜ்ஜி கலர் ஒரு பின்ச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்பு பஜ்ஜிக்கு மாவு கரைப்பது போல் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ரொம்ப திக்காக இருக்க வேண்டாம். மீடியமாக இருக்க வேண்டும்.




 

சிக்கன் துண்டை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து 

சூடான எண்ணெயில் போட்டு, தீயை மீடியமாக வைத்து சல சலப்பு அடங்கியதும் பஜ்ஜி பொன்னிறத்தில் வரும்.எண்ணெய் வடித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் பஜ்ஜி தயார்.

சூப்பராக இருக்கும். செய்து பாருங்க.

சிக்கன் லெக் பீஸ் தான் சாஃப்டாக இருக்கும்,மற்ற பகுதியில் செய்து பார்த்தேன், இந்த ருசி வரவில்லை.

Friday, May 26, 2017

சிக்கன் ஹரீஸ் (ஸ்லோ குக்கர் முறை) / Chicken Harees ( slow cooker method)

 தேவையான பொருட்கள்;-
முழுக் கோதுமை அல்லது உடைத்தது - 200 கிராம்
சிக்கன் - 400 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் குவியலாக
கரம் மசாலா விரும்பினால் ஒரு பெரிய பின்ச்
பச்சை மிளகாய் - 2
ஆலிவ் ஆயில் - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஃப்ரைட் ஆனியன் - அலங்கரிக்க.

செய்முறை:-
முழுக் கோதுமை என்றால் முதல் நாள் இரவு ஊறப் போட்டு எடுத்து செய்யலாம்.உடைத்த கோதுமை என்றால் 4 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வைக்கவும்.
 சிக்கனை சுத்தமாக கழுவி எடுத்து வைக்கவும்.உங்கள் விருப்பப்படி முழு கோழியோ அல்லது கோழியில் பிடித்த பகுதியை எடுத்துக் கொள்ளலாம்.நான் முழுக்கால் 3 எண்ணம் எடுத்துள்ளேன்.
 இங்கு ஸ்லோ குக்கரில் செய்து காட்டியிருக்கிறேன்.
ஸ்லோகுக்கரை 10 நிமிடம் நேரம் முற்சூடு செய்யவும்.

 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சூடு செய்யவும்.
 அதில் கோழி இறைச்சியை போடவும்.சூடு வந்தவுடன் பிரட்டி விடவும்.
 ஊறிய கோதுமையை தட்டி நன்கு மூழ்கும் வரை தண்ணீர் வைக்கவும். சிறிது உப்பு சேர்க்கவும்.
 இஞ்சி பூண்டு,கரம் மசாலா(ஏலம் பட்டை கிராம்பு தூள் - சிறிது போட்டால் போதும்..போடாமல் தான் இங்கு செய்வார்கள்)

 மூடி 2 - 3  மணி நேரம் ஹையில் வைத்து   மூடி வைக்கவும்.
 சிக்கன் துண்டுகளும் கோதுமை நன்கு வெந்து வரும்.



 நன்கு வெந்தவுடன் நாம் போட்ட பச்சை மிளகாய் ,சிக்கன் வெந்தவுடன் உதிர்த்து அதில் உள்ள எழும்பை எடுத்து விடவும் .போன்லெஸ் சிக்கனாக சேர்த்தால் இலகுவாக இருக்கும்.

 பின்பு நன்கு ஒரு சேர அடிக்க வேண்டும்.பசை போல் ஆக வேண்டும். கஞ்சி மாதிரி வரும்.சிக்கனும் கோதுமையும் நன்கு ஒன்று சேர்ந்து விடும்.
 2 டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
இப்படி நன்கு ஒரு சேர அடிக்க வேண்டும்.

மீண்டும் நன்கு அடிக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.


தயார் ஆனதை ஹாட் பாக்ஸிலோ பவுலிலோ எடுத்து வைக்கவும்  மேலே ஆலிவ் எண்ணெய் 2 டேபிஸ்பூன் ஊற்றி வைக்கவும்.பரிமாறும்  பொழுது அலங்கரிக்க வெங்காயம் சிவற பொரித்து வைக்கவும்.
சுவையான சிக்கன் ஹரீஸ் (ஸ்லோ குக்கர் முறை) தயார். செமையாக இருக்கும்.
ஒரு பவுலில் எடுத்து ஃப்ரைட் ஆனியன் அலங்கரித்துப் பரிமாறவும்.

நோன்பு நேரத்தில் நாம் கஞ்சி சாப்பிடுவது போல் அரபு நாட்டில் இந்த ஹரீஸ் பிரசித்தம்.மட்டனில் செய்தால் ருசி இன்னும் பிரமாதமாக இருக்கும்.நான் இங்கு சிக்கனில் செய்து காட்டியிருக்கிறேன்.
மைல்டாகத்தான் இருக்கும் , கார சாரமாக சாப்பிட விரும்புபவகளுக்கு இது அவ்வளவாக பிடிக்காது. இதை முறையில் ஹலீம் மசாலா போட்டும் செய்து பார்க்கலாம்.
(நீங்கள் ப்ரஸர் குக்கரிலும் செய்யலாம், முதல் விசில் வந்தவுடன் அடுப்பைக் குறைத்து வைத்து நன்கு மசியும் வரை குறைந்தது முக்கால் மணி - 1 நேரம் வேக வைக்கலாம்)


Monday, May 8, 2017

வாவல் மீன் ஃப்ரை / Pomfret fish fry.


 தேவையான பொருட்கள்;-
முழு வாவல் மீன் ( 200 கிராம் சைஸ்) - 3 எண்ணம்
பொரிக்க எண்ணெய் தேவைக்கு.
மிளகாய்த்தூள் -2- 3 டீஸ்பூன் அல்லது காரத்திற்கேற்ப.
மிளகு தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சோம்புத்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் அல்லது பூண்டு மட்டும் தட்டியது.
எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பின்ச் ரெட் புட் கலர் .

செய்முறை:-
சுத்தம் செய்த மீனை விருப்பம் போல் கீரி விட்டுக் கொள்ளவும்,நன்கு அலசி தன்ணீர் வடித்துக் கொள்ளவும்.


 எண்ணெய் தவிர மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.மீனில் நன்கு பூசி ஃப்ரிட்ஜில் வைத்து 1- 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
 பொரிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு வெளியே எடுத்து வைக்கவும்.

ஒரு சாலோ ஃப்ரை பேனில் எண்ணெய் சூடு செய்யவும்.
மீனை பக்குவமாக இருபக்கமும் சிவற பொரித்து எடுக்கவும்.


 சுவையான பாம்ஃப்ரெட் ஃபிஷ் ஃப்ரை ரெடி.
 நறுக்கிய வெங்காயம்,எலுமிச்சை துண்டு வைத்து பரிமாறவும்.