Tuesday, June 13, 2017

குபூஸ் / அரபிக் ப்ரெட் சிக்கன் சீஸி பிட்சா/ Arabic bread chicken cheesy pizza


 தேவையான பொருட்கள்;-
அரபிக் ப்ரெட் (மெத்துன்னு இருக்கும்) -2
மொசரல்லா சீஸ் - அரை கப்
வேக வைத்த சிக்கன் - அரை கப்
 மையோனைஸ் - 2டீஸ்பூன்
டொமட்டோ சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு , மிளகுத்தூள்- சுவைக்கு.
செய்முறை:-

ஒரு  அரபிக் ப்ரெட்டில் மையோனைஸ் ஒரு டீஸ்பூன் முதலில் தடவவும்.
அடுத்து  வேக வைத்த சிக்கன் உதிர்த்து போட்டு அதன் மீது 1டேபிள்ஸ்பூன் டொமட்டோ சாஸ் தடவி சீஸ் தூவி,சிறிது மிளகும் பொடித்து மேலே போடவும்.
 மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவும்.
 சுவையான அரபிக் ப்ரெட் சிக்கன் சீஸி பிட்சா தயார்.எல்லாம்  தயாராக இருந்தால் டக்கென்று செய்து பரிமாறக் கூடிய ரெசிப்பி.

No comments: